தமிழகத்தில் அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி இனி ஓய்வூதியதாரர் இறந்தால் சந்தா தொகை யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது பலரின் கேள்வியாக இருந்து வருகிறது.
வல்லுநர் குழு
குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
அறிக்கை தாக்கல்
இந்த குழு ஊழியர்களிடம் இருந்து கருத்துகளை பெற்று அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது. அண்மையில் CPS ஒழிப்பு அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களிடம் விருப்பத்தின் பேரில் அவர்களின் ஓய்வூதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இறப்பிற்கு பிறகு
இந்த தொகையானது ஓய்வூதியதாரர் இறக்கும் பட்சத்தில் அவரின் துணைவருக்கு அல்லது துணைவியருக்கு வழங்கப்படும். ஒரு வேளை அந்த நபர் உயிரோடு இல்லாத போது அந்த ஓய்வூதியர் நியமனம் செய்த நியமனாதாரருக்கு சந்தாத்தொகை வழங்கப்படும். மேலும் நியமனதாரர் யாரும் நியமிக்கப்படாத நிலையில் முழு தொகையும் இறந்த ஓய்வூதியரின் வாரிசுகளுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மாத சம்பளதாரர்களுக்கு விரைவில் ரூ.81,000 - மத்திய அரசு அறிவிப்பு!
வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!