1. மற்றவை

வீடு கட்ட ரூ.2.5 லட்சம் மானியம் - உங்கள் பெயரை சரிபார்க்கும் விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs. 2.5 lakh subsidy to build a house - details here!

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் தங்களது பெயர் பட்டியலை சரிபார்ப்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்.

வீடு கட்ட மானியம்

சொந்த வீடு என்பது நம்மில் பலரது கனவு. அதனை நிறைவேற்ற நீங்கள் முயற்சி மேற்கொள்ளும்போது, உங்களுக்கு உறுதுணையாக நிற்க முன்வந்துள்ளது மத்திய அரசு. ஆம். உங்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

ஆவாஸ் யோஜனா

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு வீடு கட்ட கடன் மானியம் வழங்கப்படுகிறது. ஏராளமானோர், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற்றுள்ளனர். ஆனால் இன்னும் சிலருக்கோ உதவிகள் வந்துசேரவில்லை. ஒருவேளை நீங்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்து, 2022-2023ஆம் ஆண்டிற்கான புதிய பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க விரும்பினால் பின்வரும் முறையைக் கடைப்பிடித்தால் போதும்.

ஆன்லைனில் சரிபார்க்க

  • நீங்களும் PM Awas Yojana திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தால், ஆன்லைன் விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம்.

  • முதலில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • அதில் 'சிட்டிசன் அசெஸ்மென்ட்' என்ற விருப்பம் இருக்கும். இதை கிளிக் செய்யவும்.

  • ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் 'உங்கள் மதிப்பீட்டு நிலையைக் கண்காணிக்கவும்' என்பதை கிளிக் செய்யவும்.

  • இதற்குப் பிறகு, பதிவு எண்ணை நிரப்பி, மாநிலத்தை சரிபார்க்க கேட்கப்பட்ட தகவலைக் கொடுக்க வேண்டும்.

  • கடைசியாக மாநிலம், மாவட்டம் மற்றும் நகரம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்கவும். இப்போது உங்கள் விண்ணப்பத்தின் நிலை உங்கள் திரையில் காட்டப்படும்.

தகுதி

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், மூன்று லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள், வீடு இல்லாதவர்கள் பயன்பெறலாம். இதற்காக, 2.50 லட்சம் ரூபாய் மானிய உதவி வழங்கப்படுகிறது.

3 தவணைகளில்

மூன்று தவணைகளில் இந்தத் தொகை வழங்கப்படும். முதல் தவணையாக 50,000. இரண்டாவது தவணையாக 1.50 லட்சம். அதே சமயம் மூன்றாம் தவணையாக 50,000 வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க...

விவசாயிகள் உடனே செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?

English Summary: Rs. 2.5 lakh subsidy to build a house - details here! Published on: 06 October 2022, 08:58 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.