இயற்கையை காப்பியடிப்பதில் விஞ்ஞானிகளுக்குள் போட்டியே நடக்கிறது. சொல்லப் போனால் இயற்கையை விட ஒரு படி மேலே போக முடியுமா என்றும் அவர்கள் உழைத்து வருகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த, பிரிஸ்டால் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு பறக்கும் மினி ரோபோவை உருவாக்கியுள்ளனர். அந்த ரோபோவின் இறக்கைகள், பூச்சிகளைவிட சிக்கனமாக ஆற்றலை செலவிடுகின்றன.
மினி ட்ரோன்கள் (Mini Drones)
இதற்கு முன் உருவாக்கப்பட்ட பூச்சி வடிவ ட்ரோன்கள் கூட, சிக்கலான மினி மோட்டார்கள், பற்சக்கர அமைப்புகளை கொண்டிருந்தன.ஆனால், பிரிஸ்டால் விஞ்ஞானிகள், அதுபோன்ற சிக்கலான அமைப்புகளை அறவே தவிர்த்து விட்டனர். மாறாக, இரண்டு மின் காந்த முனைகளை நேரடியாக இறக்கைப் பகுதிக்கு அருகே வைத்து, மாறி மாறி மின் துாண்டல் தந்தால், அது பூச்சி இறக்கையை அடித்துப் பறப்பது போன்று இருக்கிறது. இதனால் குறைந்த மின்னாற்றலில், பூச்சியை விட வேகமாக இறக்கை அடித்துப் பறக்க அந்த ட்ரோனால் முடிகிறது.
இந்த ஆய்வின் முடிவில், கண்காணிப்பு, மீட்பு, தேடல் பணிகளுக்கு ஏற்ற, சிறிய ட்ரோன்களுக்கான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என, பிரிஸ்டால் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
உர மானியம் நிறுத்தத்தால் உரமூட்டை விலை உயர்வு!
வீசும் காற்றைக் கட்டுப்படுத்தி கூடுதல் இலாபம் தரும் 'ஜிங்குனியானா' சவுக்கு மரம்!