பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 March, 2022 8:25 AM IST

குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இந்தத் தொழில் சூப்பராக ஒர்க்கவுட் ஆகும். இதன் மூலம், மூன்றே மாதங்களில் ரூ.3 லட்சம் லாபம் கிடைக்கும். விவசாயத்தில் குறைந்த முதலீட்டில் நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானதுதான். இந்தத் தொழிலில் நீங்கள் குறைந்த பணத்தை முதலீடு செய்தால் போதும். லாபமும் பெரிதாகக் கிடைக்கும். அதுதான் துளசி விவசாயம். இந்தத் தொழிலில் மிகக் குறுகிய காலத்தில் அதிகளவில் சம்பாதிக்க முடியும்.

துளசி என்பது ஆன்மீக ரீதியாகவும் ஆயுர்வேதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன் காரணமாகவே, இதற்கான தேவையும் அதிகமாக இருக்கிறது. துளசிச் செடி வியாபாரம் செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். துளசி செடியில் மருத்துவ குணம் மிக அதிகம். இதன் வேர், தண்டு, இலை உள்ளிட்ட அனைத்து பாகங்களும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது. இதற்கான தேவை எப்போதுமே அதிகமாக இருக்கும். துளசி செடி வீட்டு வைத்தியம் மட்டுமல்லாமல் யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா பிரச்சினை வந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்களிடையே நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே துளசி போன்ற இயற்கை மருந்துப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

துளசி விவசாயம்

துளசி விவசாயம் செய்ய ஜூலை மாதம் உகந்ததாக இருக்கும். துளசி செடிகளை 45 செ.மீ இடைவெளியில் நட்டு வளர்க்க வேண்டும். நடவு செய்த உடன் நீர்ப்பாசனம் அவசியம். துளசிப் பயிரை அறுவடை செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு நீர்ப்பாசனத்தை நிறுத்த வேண்டும். துளசி செடியில் பூக்கள் பூக்கும் போது அதில் உள்ள எண்ணெய்யின் அளவு குறையும் என்பதால், பூ பூக்க ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யப்பட வேண்டும்.

அறுவடை செய்த துளசி பயிரை நேரடியாக சந்தைக்கு சென்று வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு துளசி செடிகளை விற்பனை செய்யலாம். மருந்து நிறுவனங்கள் அல்லது மருந்து ஏஜென்சிகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் செடிகளை விற்கலாம்.

ஒப்பந்த அடிப்படையிலும் நீங்கள் துளசி விவசாயத்தில் ஈடுபடலாம். டாபர், பதஞ்சலி உள்ளிட்ட பல நிறுவனங்கள் துளசியை ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்து வருகின்றன.

முதலீடு

துளசி விவசாய தொழிலைத் தொடங்க உங்களிடம் 15,000 ரூபாய் இருந்தால் போதும். துளசி விவசாய தொழிலில் 3 மாதங்களிலேயே ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் படிக்க...

சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!

English Summary: Invest Rs. 15,000 in this agriculture - 1 lakh income per month!
Published on: 05 March 2022, 10:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now