பிபிஎஃப்-ல் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால், இறுதியில் மொத்த தொகையாக ரூ. 1.80 லட்சம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இத்துடன் இந்தத் தொகைக்கான வட்டியும் உங்களை வந்தடையும்.
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் மூலம் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. அத்துடன், இது அதிக வட்டி செலுத்தும் திட்டங்களில் ஒன்றாகும்.
சலுகைகள்
பிபிஎஃப்-ல் முதலீடு செய்வதற்கும் வருமான வரி விலக்கு உண்டு என்பதால், இதில் முதலீடு செய்வது மக்களின் விருப்பத் தேர்வாக உள்ளது.
நீங்கள் பிபிஎஃப்-ல் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்தால், கணக்கின் முதிர்வில் உங்களுக்கு லட்ச ரூபாய் வரை கிடைக்கும். இதில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் எதிர்காலத்திற்காக பெரும் பணத்தை சேமிக்கலாம்.
முதலீட்டு காலம்
பிபிஎஃப்-ல் முதல் முதலீடு 15 ஆண்டுகள் ஆகும். இப்போது 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால், இந்தத் தொகை மொத்தம் 1.80 லட்சமாக முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.
இந்த தொகைக்கு 7.1 சதவீத வட்டியின்படி 1.45 லட்சம் கிடைக்கும்.
இதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பின் 3.25 லட்சம் ரூபாய் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இப்போது அந்தத் திட்டத்தை 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்து, மாதத்திற்கு 1000 ரூபாய் டெபாசிட் செய்தால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 3.25 லட்சம் ரூபாய் 5.32 லட்சமாக அதிகரிக்கும்.
ரூ.12 லட்சம்
ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பிறகு, அதை மேலும் ஐந்தாண்டுகள் அதிகரித்தால், பிபிஎஃப் கணக்கில் உங்கள் தொகை ரூ.8.24 லட்சமாக அதிகரிக்கும். இதேபோல், மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு முன்னோக்கி எடுத்துச் சென்று, ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால் இந்தத் தொகை 12.36 லட்சம் ரூபாயாக உயரும்.
மேலும் படிக்க...