ஐபோன் பம்பர் விற்பனை ஜனவரி 12 ஆம் தேதியான இன்று முதல் தொடங்கி ஜனவரி 15 வரை நடைபெற இருக்கிறது. இதில் இதுவரை இல்லாத அளவில் ஆஃபர் விலையில் ஐபோன் கிடைக்கின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தற்பொழுது செகண்ட் ஹேண்ட் மொபைல்களை அதிகமானோர் ஆன்லைனில் வாங்க தொடங்கியிருக்கின்றனர். விலை உயர்ந்த மொபைல்களை வாங்கும் ஆசை இருக்கிறவர்கள், அதிக விலை கொடுத்த அந்த மொபைல்களை வாங்க முடியாது என்பதால், அதே மொபைல்கள் செகண்ட் ஹேண்டில் கிடைக்கும்போது விரைந்து வாங்கிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த மொபைல்கள் Cashify தளத்தில் மிக குறைவான விலையில் கிடைக்கின்றது என்பது கூடுதல் தகவல்.
அந்த வகையில் பண்டிகை காலத்தினையொட்டி பம்பர் விலையில் ஐபோன்கள் மிக குறைந்த விலைக்கு விற்பனைக்குக் கொடுக்கப்பட இருக்கின்றன. Cashify தளத்தில் இன்று முதல் புதுப்பிக்கப்பட்ட மொபைல்களுக்கான ஆஃபர் தொடங்குகின்றது. ஜனவரி 15 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஆஃபரில் ஐபோன்கள் மிகப்பெரிய ஆஃபர் விலையில் கிடைக்க இருக்கின்றன.
பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் மிகக் குறைந்த விலையில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பினால், குறைந்த விலையில் ஐபோன் வாங்க விரும்பினால், Cashify தான் சரியான இடம் எனக் கூறப்படுகிறது. அதோடு, ஆப்பிள் ஐபோனை ரூ.21,999-க்கு வாங்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஐபோன் தவிர சாம்சங், சியோமி உட்பட பல நிறுவனங்களின் பிரிமியம் ஸ்மார்ட்போன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்க இருக்கின்றன. iPhone 12 Pro Max ஐ 67,999 ரூபாய்க்கும், iPhone 11 ஐ 29,499 ரூபாய்க்கும், iPhone X 21,999 ரூபாய்க்கும் தள்ளுபடி விலையில் வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் போன்களிலும் தள்ளுபடி இருக்கிறது எனக் கூறப்படுகிறது. Samsung S21 Plus 5G-ன் ஆரம்ப விலை ரூ.35,999. சியோமி நோட் 9 சீரிஸிலும் பம்பர் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கக் கூடிய பிளிப்கார்ட் மற்றும் அமேசான் குடியரசு தின விற்பனைக்காக நீங்கள் காத்திருக்கலாம். மேலும், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க