எதிர்பாராதவிதமாக ரூபாய் நோட்டுக்கள் கிழிந்து விட்டாலோ, அல்லது, கிழிந்த நோட்டு நம்மிடம் வந்துவிட்டாலோ, அதை என்ன செய்வது என்று கவலைப்படுவது வழக்கம். இனி அந்தக் கவலை வேண்டாம். இதைச் செய்தால், உங்களுக்கு முழுத்தொகையும் கிடைக்கும்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் வங்கிக் கிளைக்குச் செல்லாமல் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம் மெஷின் மூலமாகப் பணம் எடுக்கின்றனர். ஏடிஎம் மூலம் நாம் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம். ஆனால், ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது நம்மில் பலருக்கு கிழிந்த நோட்டுகள் வந்திருக்கும். அது உங்களுக்கும் நடந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
சிதைந்த அல்லது கிழிந்த ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டிருந்தால், அவற்றை மாற்றுவதற்கு நீங்கள் எந்த ஏடிஎம்மில் பணம் எடுத்தீர்களோ அதற்குச் சொந்தமான வங்கியில் புகார் செய்ய வேண்டும்.
இந்தப் புகாரில், ஏடிஎம்மில் பணம் எடுத்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். பணம் எடுத்த ரசீதையும் இணைக்க வேண்டும். ரசீது இல்லை என்றால், உங்கள் மொபைல் போனுக்கு வந்த SMS விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, கிழிந்த நோட்டுகளை வழங்கிய சம்பந்தப்பட்ட வங்கிகள் அவற்றை மாற்றித் தரவேண்டும். இதுகுறித்து இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் தெரிவித்துள்ளது.
எனவே எந்தவொரு வங்கியும் ஏடிஎம்களில் இருந்து எடுத்த சிதைந்த நோட்டுகளை மாற்றித்தர மறுக்க முடியாது. இதையும் மீறி வங்கிகள் மாற்றித் தர மறுத்தால், வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி அளிக்கப்படும் வாடிக்கையாளரின் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வங்கி ரூ.10,000 வரை நஷ்டஈடு செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க...
படுக்கையறை, சமையலறை, வசதிகளுடன் கூடிய 22 அடி உயர ஹம்மர் கார்!