மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகையைச் செலுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. எனவே விரைவில் இது குறித்த அறிவிக்கை அரசு ஊழியர்களை வந்துசேரும்.
பல மாதங்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு வர வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகை ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் செலுத்தப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்த மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், எவ்வளவு அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம்.
38% உயர்வு
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இதனால், பணத்தின் வாங்கும் திறன் குறைகிறது. இதை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அதாவது ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். கடைசியாக, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டது.
உயர்வு
இதையடுத்து, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்து அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கடந்த மார்ச் மாதமும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி நிறுத்தம்
2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கியபோது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை அகவிலைப்படி நிறுத்திவைக்கப்பட்டது. இந்த 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை இன்னும் அரசு ஊழியர்களுக்கு செலுத்தப்படாமல் உள்ளது.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழிந்தபின்னும் அகவிலைப்படி நிலுவைத்தொகை பற்றி அரசு முடிவெடுக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், விரைவில் நடைபெறும் கேபினட் கூட்டத்தில் அகவிலைப்படி நிலுவைத்தொகை ஆலோசிக்க உள்ளது.
ரூ.2 லட்சம் வரை
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை செலுத்தப்படும்போது, மூன்றாம் நிலை ஊழியர்களுக்கு 11,880 ரூபாய் முதல் 37,554 ரூபாய் வரை நிலுவைத்தொகை கிடைக்கும். 13ஆம் நிலை அல்லது 14ஆம் நிலை ஊழியர்களுக்கு 1,44,200 ரூபாய் முதல் 2,15,900 ரூபாய் வரை அகவிலைப்படி நிலுவைத்தொகைகிடைக்கும்.
55 லட்சம்
அகவிலைப்படி நிலுவைத் தொகை செலுத்தப்படுவதால் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!