தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள சிஸ்டம் புரோகிராமர் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம் நடைபெற உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் அவ்வப்போது, தற்காலிக நியமன அடிப்படையில், ஆட்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அப்படியொரு வாய்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் சிஸ்டம் புரோகிராமர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
System Programmer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி (Educataional Qualification)
MCA/M.Sc (IT)/M.Sc (Computer Science)/ படித்திருக்க வேண்டும்.
அனுபவம்(Experience)
3 வருட பணி அனுபவம் அவசியம்
வயது வரம்பு(Age limit)
35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் (Salary)
ரூ. 22,000
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை(How to apply)
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுய விவர குறிப்பை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி
ce@tnjfu.ac.in
விண்ணப்பிக்க கடைசித் தேதி(Lastdate)
24.01.2022
இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள், வரும் 24ம் தேதி மாலைக்குள், உங்கள் விண்ணப்பங்கள் சென்று சேரும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க...
சவக்குழிக்கு அட்வான்ஸ் புக்கிங்- அடக்கொடுமையே!
படுத்த படுக்கையாக இருந்தவர் எழுந்து நடந்த அதிசயம்- கொரோனாத் தடுப்பூசி செய்த மாயம்!