1. மற்றவை

படுத்த படுக்கையாக இருந்தவர் எழுந்து நடந்த அதிசயம்- கொரோனாத் தடுப்பூசி செய்த மாயம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The person who was in bed got up - the magic of the coronary vaccine!

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 5 ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருந்தவர், கொரோனாத் தடுப்பூசி போட்ட மறுநாளே எழுந்த நடக்க ஆரம்பித்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கொரோனாத் தடுப்பூசி

உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து நாம் தப்பிக்க,கொரோனாத் தடுப்பூசி மட்டுமேத் தீர்வு என மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. அதுமட்டும் அல்லாமல், நாட்டு மக்களை நோய்த் தொற்றில் இருந்துக் காக்கும் நடவடிக்கையாக, இலவசத் தடுப்பூசி முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த முகாம்களுக்கு மக்களும் ஆர்வத்துடன் வந்து, தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். இதனால், அச்சம் ஓரளவுக்கு குறைந்து வருவதுடன், உயிருக்கு ஆபத்து இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.

தடுப்பூசி செய்த மாயம் (The magic of being vaccinated)

அந்த வகையில் ஜார்கண்டில் சுமார் 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த நபர்,  தடுப்பூசி செலுத்தப்பட்ட அடுத்த நாள் எழுந்து நடக்க ஆரம்பித்து குடும்பத்தினரை, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தின் உத்தசரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள சல்காதி கிராமத்தைச் சேர்ந்தவர் துலர்சந்த் முண்டா.
55 வயதான இவர், எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். இதனால், வாய்பேச முடியாமல், படுத்த படுக்கையானார்.

அவரது வீட்டிற்கு சென்ற சுகாதார ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியரான முண்டாவுக்கு கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியை அண்மையில்,  செலுத்தினார். என்ன அதிசயம்? மறுநாளே, முண்டா எழுந்து நடக்கத் தொடங்கியதோடு பேசவும் ஆரம்பித்தார் ”என்று பீட்டர்வார் சமூக சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் அல்பெலா கெர்கெட்டா கூறியுள்ளார்.

அதிசய நிகழ்வு (Miracle)

இதுகுறித்து, பொகாரோவின் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜிதேந்திர குமார் கூறுகையில், " இந்த அதிசயமான நிகழ்வு" குறித்து ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முண்டா முதுகுத்தண்டு பிரச்சனையால் படுத்த படுக்கையாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தெய்வ செயல் (Divine act)

மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள சல்காதிஹ் கிராம மக்கள் இந்த சம்பவத்தினால் ஆச்சரியமடைந்தனர். இது தெய்வ செயல் என்று கிராமத்தினர் கூறுகின்றனர்.

வதந்திகள் (Rumors)

தடுப்பூசி போட்டால், உடல் ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுவதாக, பலர் வதந்திகளை எழுப்பிவந்தனர். இந்நிலையில், பல ஆண்டுகள் படுக்கையில் முடங்கிய ஒருவரைக் கொரோனாத் தடுப்பூசி தட்டி எழுப்பியிருக்கிறது என்பது, அனைத்து வதந்திகளுக்கும் அதிரடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க...

நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

ஒமிக்ரான் வேகமாக குறையும்: அமெரிக்க அறிவியலாளர் நம்பிக்கை!

English Summary: The person who was in bed got up - the magic of the coronary vaccine! Published on: 16 January 2022, 10:58 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.