Others

Wednesday, 24 August 2022 09:32 AM , by: Elavarse Sivakumar

சென்னையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை வேலைதேடுவோர் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

இதன் ஒருபகுதியாக, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வரும் 28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றன.

வேலைவாய்ப்பு முகாம்

கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது.

கல்வித்தகுதி

இந்த முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) பெற்ற அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்கின்றன.

பதிவு ரத்து கிடையாது

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும், வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் - அரசு அறிவிப்பு!

தன் உயிரைக் கொடுத்துத் தாயைக் காப்பாற்றிய மகன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)