பீகாரில் தள்ளாடும் வயதிலும், தளராத தாத்தா ஒருவர், 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உருமாறியக் கொரோனா (Transformed corona)
உலக நாடுகளை உலுக்கி எடுத்தக் கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களாக உருமாறி உருமாறி நம்மை அச்சத்தின் பிடியிலேயே வைத்திருக்கிறது.
இதையடுத்துக் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக, தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசியேத் தீர்வு (Vaccine solution)
இந்த தடுப்பூசி மட்டுமே தற்போதைய பாதுகாப்பு என்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக சிறப்பு மெகாத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தடுமாறிய மக்கள் (Stumbling people)
தடுப்பூசி போடுவதால் மாரடைப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதாக வதந்திகள் வந்ததால், தடுப்பூசி போட்டுக்கொள்ள பலரும் பின்வாங்கினர். இருப்பினும், கொரோனாவைத் தொடர்ந்து, டெல்டா வைரஸ், ஒமிக்ரான் என பல வைரஸ்களாக உருவமாறியதால், மக்கள் தடுப்பூசியைத் தைரியமாகத் தத்தெடுக்க முன்வந்தனர். இதனால் தற்போது, கொரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளன.ஒருவருக்கு தலா 2 டோஸ் தடுப்பூசிப் போட வேண்டியது கட்டாயம்.
84 வயது தாத்தா (84-year-old grandfather)
இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த 84 வயது தாத்தா ஒருவர் 11 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இப்போது மாட்டியுள்ளார். பிரம்மதேவ் மண்டல் என்ற அந்த தாத்தா பல ஊர்களில் ஊசி போட்டுள்ளார். 12வது ஊசி போட வந்தபோது சிக்கிக் கொண்டார். 11 ஊசி போட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பூசி அனுபவம்,சூப்பரா இருக்குப்பா" என்றுக் கூறும் இந்தக் கில்லாடித் தாத்தா, எப்படி 11 டோஸ் போட்டார், எப்படி இதை அனுமதித்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மண்டல் முன்னாள் தபால் துறை ஊழியரான மண்டல், எந்தெந்த தேதியில் எங்கு போய் ஊசி போட்டுக் கொண்டோம் என்பதையும் தனது டைரியில் எழுதி வைத்துள்ளார்.
விசாரணை (Investigation)
மண்டல் தடுப்பூசி போட்டுக் கொண்டது பிரச்சினை இல்லை, ஆனால் ஒரு தனி மனிதர் இத்தனை ஊசிகளை போட எப்படி நிர்வாகம் அனுமதித்தது. எங்கு தவறு நடந்தது என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
மேலும் படிக்க...