அண்மையில், ரிசர்வ் வங்கி, அதன் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், 'ரெப்போ' வட்டி விகிதத்தில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என தெரிவித்தது. இதையடுத்து, வங்கிகள், வீட்டுக்கடன் (Housing Loan) உள்ளிட்ட கடன்களுக்கான வட்டியை குறைக்குமா அல்லது தற்போதைய நிலையே நீடிக்குமா என்ற கேள்வி வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கிட்டத்தட்ட 15 வங்கிகள், தங்களுடைய வீட்டுக் கடனுக்கான வட்டியை, 7 சதவீதத்துக்கும் குறைவாகவே வைத்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., (SBI) அதனுடைய வீட்டுக்கடனுக்கான வட்டி, 6.70 சதவீதத்திலிருந்து துவங்குவதாக அறிவித்துள்ளது.
நல்ல வாய்ப்பு
மேலும் இவ்வங்கி, அதன் பருவ மழைக் கால சலுகை திட்டத்தின் கீழ், ஏற்கனவே வீட்டுக்கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை, 100 சதவீதம் தள்ளுபடி செய்திருப்பதாகவும், இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் இம்மாதம் 31 வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. வழக்கமாக, எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கிகள், வீட்டுக் கடனுக்கான தொகையில், 0.40 சதவீதத்தை பரிசீலனை கட்டணமாக பெற்றுக் கொள்கின்றன.
இந்த கட்டண தள்ளுபடி சலுகை, புதிதாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பு என்கின்றனர் நிபுணர்கள்.
தங்க பத்திர முதலீடு: ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு!
சாதகமான அம்சம்
கொரோனா (Corona) பாதிப்பிலிருந்து மெல்ல பொருளாதாரம் மீளத் துவங்கி இருக்கும் நிலையில், இன்னும் சிறிது காலத்துக்கு, ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை அறிவிக்காது என்பதும், கடன் வாங்குவோருக்கு சாதகமான அம்சம் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும், 2019 அக்டோபர் முதல் தேதிக்கு முன்னதாக வீட்டுக் கடன் வாங்கியவர்களும், எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலிருந்து கடனை, ரெப்போவுடன் இணைக்கப்பட்ட ஆர்.எல்.எல்.ஆர்., விகிதத்துக்கு மாற்றிக் கொள்வது, லாபமாக இருக்கும் என்கின்றனர். குறிப்பாக, 15 ஆண்டு கால வீட்டுக் கடனில், 50 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி குறையும்பட்சத்தில், குறிப்பிடத்தக்க அளவில் பயன் கிடைக்கும் என்கின்றனர்.
மேலும் படிக்க
காகிதமில்லா முதல் பட்ஜெட்: கணினி மயமாகும் சட்டசபை!