1. செய்திகள்

காகிதமில்லா முதல் பட்ஜெட்: கணினி மயமாகும் சட்டசபை!

R. Balakrishnan
R. Balakrishnan
Computerized Assembly
Credit : Dinamalar

தமிழக சட்டசபையில் முதல் முறையாக, வரும் 13ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டசபையை, காகிதமில்லா சட்டசபையாக மாற்றும் பணி 2018ல் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, சட்டசபை செயலக ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி (Computer Training) அளிக்கப்பட்டது. அதன்பின், எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் கொள்கை விளக்க குறிப்பு, பட்ஜெட், வினாக்கள், விடைகள், கமிட்டி அறிக்கைகள் போன்றவை, 'இ - மெயில்' வழியாக அனுப்பப்பட்டன. காகிதப் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டது.

காகிதமில்லா பட்ஜெட்

வரும் 13ம் தேதி காலை 10:00 மணிக்கு, முதல் முறையாக தமிழக சட்டசபையில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது, முதல்வராக ஸ்டாலின் (MK STALIN) பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட். நிதித் துறை அமைச்சராக முதல் முறையாக பொறுப்பேற்றுள்ள தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்.
காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, சட்டசபை கூட்டம் நடக்க உள்ள சென்னை கலைவாணர் அரங்கில், எம்.எல்.ஏ.,க்கள் இருக்கைகளின் முன்புறம் உள்ள மேஜைகளில் கம்ப்யூட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் தனித்தனி கம்ப்யூட்டர்கள் பொருத்தப்படுகின்றன. இது தவிர, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், 'டேப்லெட்' வழங்கப்பட உள்ளது. சபாநாயகர் இருக்கையிலும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. சட்டசபையில், நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பட்ஜெட் உரை ஓடத் துவங்கும். நிதி அமைச்சர் படிக்கும் பக்கம் மட்டுமே கம்ப்யூட்டரில் தெரியும். 'எல்காட்' நிறுவனம் வழியாக கம்ப்யூட்டர்கள் மற்றும் 'டேப்'கள் வாங்கப்பட்டு உள்ளன.

தாக்கலாவதற்கு முன்பாக, பட்ஜெட் வெளியாகி விடக்கூடாது என்பதற்காக, கம்ப்யூட்டர்களில் முன்னதாக பதிவேற்றம் செய்யாமல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நிதி அமைச்சர் உரையை வாசிக்க துவங்கிய பின், எம்.எல்.ஏ.,க்களுக்கான கம்ப்யூட்டர்களில் வெளியாகும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மாணவர்களின் வீடுகளுக்கே சத்துணவு: தமிழக அரசின் அருமையான முயற்சி!

இ - மெயில் வழியே பட்ஜெட்

பட்ஜெட் உரை முடிந்த பின், பத்திரிகைகளுக்கு, 'இ - மெயில்' வழியே பட்ஜெட் உரையை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல், வேளாண் துறைக்கு முதல் முறையாக தமிழக சட்டசபையில், வரும் 14ம் தேதி தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதையும் காகிதமில்லா வேளாண்மை பட்ஜெட்டாக தாக்கல் செய்ய, சட்டசபை செயலக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே, ஹிமாச்சல பிரதேசம், ஒடிசா, கேரளா போன்ற மாநிலங்களில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

பழைய நாணயங்கள் விற்பனையில் எச்சரிக்கை தேவை: ரிசர்வ் வங்கி!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற இணையதளம் அறிமுகம்!

English Summary: Paperless First Budget: Computerized Assembly! Published on: 06 August 2021, 09:21 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.