தாங்கள் ஆட்சியமைத்தால் பழைய பென்சன் திட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களின் மிகப் பெரிய கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டம்தான்.
தமிழகத்தில் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று CPS ஒழிப்பு அமைப்பினரும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்களும் நீண்ட காலமாகவே தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மவுனம்
ஆனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிதி நிலையைக் காரணம் காட்டி இத்திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகக் காரணம் கூறி வருகின்றனர்.
வாக்குறுதி
இந்நிலையில், இமாசலப் பிரதேசத்தில் தேர்தல் வாக்குறுதியாக பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். காங்க்ரா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் கட்சி பழைய பென்சன் திட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.
பிஜேபி அரசு இந்த விஷயத்தில் அரசு ஊழியர்களை ஏமாற்றுவதாகவும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் உறுதியாக அமல்படுத்தும் என்று அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஆர்.எஸ்.பாலி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க...
PM-kisan பயனாளிகள் பட்டியல் - அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்!