Others

Friday, 26 August 2022 02:34 PM , by: Deiva Bindhiya

Medical Coding Free Training by Tahdco, Job Guaranteed!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளங்கலை அறிவியல் Life Science முடித்த மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு இலவசமாக Medical Coding Training குறுகிய கால பயிற்சியாக அளித்து பல்வேறு மருத்துவத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியர்களாக இருக்க வேண்டும். இளங்கலை அறிவியல் (Life Science) பட்டப்படிப்பில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இணையதளம் வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணத் தொகை ரூ.15,000/- தாட்கோ வழங்கும். பயிற்சி முடிந்தவுடன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு பெற்ற மாணக்கர்களுக்கு ISO International Organisation For Standardization தரத்துடன் கூடிய சான்றிதழ் அளிக்கப்படும். மேலும் பயிற்சியில் தேர்ந்த மாணக்கர்களுக்கு நேர்மூக தேர்வின் மூலம் நூறு சதவீதம் மருத்துவத் துறை மென்பொருள் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும். வேலையில் சேர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வீட்டிலிருந்தபடியே அந்நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பணி மேற்கொள்ளலாம்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் குறுகிய காலத்தில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க:

இலவசங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

பயிர்களுக்கு அறுவடை இயந்திரம் வாடகைக்கு பெறுங்கள்! விவரம் உள்ளே

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)