1. விவசாய தகவல்கள்

பயிர்களுக்கு அறுவடை இயந்திரம் வாடகைக்கு பெறுங்கள்! விவரம் உள்ளே

Deiva Bindhiya
Deiva Bindhiya
Rent a harvester for pulses! Detail inside

தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை, நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகைப் பயிர்களுக்கான அறுவடை இயந்திரத்த வாடகைக்கு வழங்குகிறது. இதற்கான் முழு விவரம் கிழே பதிவில் காணுங்கள்.

ஆம், வேளாண் துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு எடுத்துவருகிறது. அந்த வகையில் பிரதமரின் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் பல்லாயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், தமிழக அரசும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், அறுவடை இயந்திரம், வாடகைக்கு அரசு வழங்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது. இவை, 

  • நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகைப் பயிர்களை அறுவடை செய்ய பயன்படுத்தப்படுகிறது.
  • குறித்த நேரத்தில் அறுவடை செய்வதுடன், தானிய இழப்பு தவிர்க்கப்படுகிறது.
  • வேலைவாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, அறுவடைக்கான செலவினங்கள் குறைக்கப்படுகிறது.
  • இவ்வியத்திரத்தின் வாடகையாக அரசு நிர்ணயம் செய்திருக்கும் கட்டணம், மணிக்கு ரூபாய் 1010 ஆகும்.

தொடர்புக்கு, மாவட்ட அளவில், செயற் பொறியாளர் மற்றும் உதவி செயற் பொறியாளரை தொடர்புக்கொள்ளுங்கள். 

மேலும் விபரங்களுக்கு, தலைமைப் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 600035, 044-29515322 என்ற முகவரியை அணுகலாம்.

இதைத் தொடர்ந்து விண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைனில் விண்ணப்பிக்க http://mis.aed.tn.gov.in/ என்ற ஆதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்வையிடவும்.

மேலும் படிக்க:

TNEA கவுன்சிலிங் ஒத்திவைப்பு, அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ன?

English Summary: Rent a harvester for pulses, grains, paddy! Detail inside Published on: 25 August 2022, 02:50 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.