Others

Saturday, 18 June 2022 08:31 AM , by: Elavarse Sivakumar

ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்தும்படி பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.

ஓய்வூதியம்

தொழிலாளர் பென்சன் திட்டம் (1995)-ன் படி ஊழியர்களுக்கு இப்போது குறைந்தபட்சம் 1000 ரூபாய் மட்டுமே பென்சன் வழங்கப்படுகிறது. இதனை 2000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வு, நிதி நெருக்கடி போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் மூத்த குடிமக்களுக்கு இந்த பென்சன் தொகை போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.

முடிவு இல்லை

ஆனால் இதுகுறித்து மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் இப்போது குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்துவதற்கான கோரிக்கைகள் வலுத்துள்ளன. அதுகுறித்து மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதார ஆலோசனைக் குழு சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரூ.2000

குறைந்தபட்ச பென்சன் தொகையை 2000 ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஓய்வு பெறும் வயது வரம்பையும் உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அவசியம் எனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்சன் சிஸ்டம்

ஊழியர்களுக்கான பென்சன் தொகை உயர்த்தப்பட வேண்டும் என்பதோடு, யுனிவர்சல் பென்சன் சிஸ்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. த
ற்போதைய நிலையில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் மட்டுமே பென்சன் கிடைத்து வருகிறது. இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த முடிவை அரசு விரைவில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசீலனை

இந்த விஷயத்தில் மத்திய அரசும் மாநில அரசுகளும்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அமைப்பு சாரா துறையினர், புலம்பெயர் தொழிலாளர்கள், பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் போன்றோருக்கு திறன் பயிற்சிகள் கிடைப்பது சிரமமான விஷயம். எனவே இந்த விஷயத்தில் அரசு சரியான கொள்கை முடிவை உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.

மேலும் படிக்க...

கவரும் ஸ்ட்ராபெரி - விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் யூரியாத் தட்டுப்பாடு- குறுவை சாகுபடியில் சிக்கல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)