மத்திய பிரதேச மாநிலத்தில், அரசின் கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, குரங்கின் இறுதிச்சடங்கு காரியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹனுமனின் வடிவம்
குரங்குகளை, பவான் ஹனுமனின் வடிவமாகப் பாவிப்பது, வட மாநில மக்களின் வாடிக்கை. அது மட்டுமல்ல, அவற்றுக்கு ஏதேனும் இன்னல் ஏற்படும்போது, அதில் இருந்துக் காப்பாற்றுவதற்கும் பலர் முன் வருவார்கள்.
இன்னும் ஒருசிலர், ஒரு படி மேலே போய், சாலை விபத்து, மின்சாரம் விபத்து போன்றவற்றில் சிக்கி குரங்குகள் உயிரிழக்கும் போது அவற்றை மாலை, மரியாதையுடன் அடக்கம் செய்வார்கள். இதன்படி தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. குரங்கின் இறுதிச்சடங்கு காரியத்தில் 1500 பேர் பங்கேற்றனர்.
குளிரால் மரணம் (Death by cold)
மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டம் தலுபுரா கிராமத்தில் தற்போது உச்சக்கட்டக் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்த குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அண்மையில் குரங்கு ஒன்று இறந்துவிட்டது.
அதனை அக்கிராம மக்கள் திரண்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் செய்து எரியூட்டினர். இளைஞர் ஒருவர் குரங்கிற்காக மொட்டை அடித்துக்கொண்டார்.
காரியம்
அதனைத் தொடர்ந்து பணம் வசூல் செய்து குரங்கிற்கு காரியம் செய்து கிராம மக்களுக்கு விருந்து வைத்திருந்திருக்கிறார். இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். ஆனால் சமூக இடைவெளி, கட்டாய முகக்கவசம் போன்றக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவில்லை.
2 பேர் கைது (2 people arrested)
இந்த நிகழ்வின் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் கோவிட் பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனை மதிக்காமல் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததால் இருவரை போலீசார் கைது செய்தனர். இதனால் கிராமத்தினர் பலர் பயந்து தலைமறைவாகிவிட்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் பரவியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மஞ்சப்பை பரோட்டா: மதுரையில் அறிமுகம்!
தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் தொடக்கி வைக்கிறார்!