1. மற்றவை

7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவருக்கு 1.20லட்சம் கடன் வழங்கியக் கூட்டுறவு சங்கம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
1.20 lakh loan to a person who died 7 years ago

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 2012ம் ஆண்டு இறந்தவருக்கு, 2019ம் ஆண்டு, 1.20 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக, முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது.

சேலம் மாவட்டம், இடைப்பாடி, வெள்ளரிவெள்ளியில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயக் கடன் வழங்கியதில், கடந்த 2016, 2021ல், அரசு தள்ளுபடி செய்த கடன்களில் முறைகேடு நடந்துள்ளதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இறந்தவரின் பெயரில் கடன் வழங்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

இறந்தவருக்கு சம்மன் (Summons to the deceased)

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வேட்டுவப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. வயது 58. சங்க உறுப்பினரான இவர், 2012 ஜனவரி 19ம் தேதி இறந்துவிட்டார். ஆனால் அவர், 2019ல் சங்கத்தில், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதைக் கட்ட அறிவுறுத்தியும், கூட்டுறவு சார்பதிவாளர் கடந்த டிசம்பர்,2ம் தேதி 'சம்மன்' அனுப்பியுள்ளார். ராமசாமியின் மகன் சித்துராஜ் அவர் முன் ஆஜராகி, தந்தை இறந்ததை தெரிவித்தார்.

அலட்சியத்தின் உச்சம்

மேலும், அவர் பெயரில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். இதனால், 2016, 2021ல், தள்ளுபடி செய்த விவசாய கடன்களை முழுமையாக விசாரித்து, முறைகேடான கடன்களை வசூலிக்குமாறு, சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாடிக்கை (Custom)

இறந்தவரின் பெயரில் கடன் வழங்கியதாகக் கணக்கு காட்டுவதும், சிலர் வாங்கியக் கடனைக் கட்டாமல் இருப்பதற்காக உயிருடன் இருப்பவரே, இறந்துவிட்டார் எனக் கூறி கணக்கை முடித்துவைப்பதும் வங்கிக்கடன் பிரிவுக்கு சகஜம்தானே.

மேலும் படிக்க...

வீரரோ, காளையோ ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி!

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை அறிவிப்பு!

English Summary: 1.20 lakh loan to a person who died 7 years ago Published on: 12 January 2022, 06:57 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.