சத்தீஸ்கர் மாநிலத்தில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில், வயல்வெளியில் கிடந்த பச்சிளங்குழந்தையை இரவு முழுதும் பாதுகாத்த நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குழந்தையை பாதுகாத்த நாய்கள்: (Dogs Protect The child)
சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டம் லோர்லி நகரின் அருகிலுள்ள சரிஸ்தல் என்ற கிராமத்தில், நேற்று காலை சிலர் விவசாய பணிகள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சற்று தூரத்தில் நாய் ஒன்று குறிப்பிட்ட இடத்தை மட்டும் சுற்றி சுற்றி வந்து குரைத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து குழந்தை அழுகுரலும் கேட்டது.
கிராம மக்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கு ஏழு குட்டி நாய்களுக்கு மத்தியில், பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் அழுதபடி கிடந்தது. கிராம மக்களுக்கு பரிதாபத்தை விட பெரும்
ஆச்சரியம் ஏற்பட்டது. இரவு முழுதும் அந்தக் குழந்தையை தன் குட்டிகளுடன் சேர்த்து, அந்த நாய் பாதுகாத்து இருப்பதை உணர்ந்தனர்.
குழந்தை மீட்பு
அந்தக்குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு அகான்ஷா என்று கிராம வாசிகள் பெயர் சூட்டி உள்ளனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தையுடன் நாய்க் குட்டிகள் இருக்கும் படத்தை ஏராளமானோர் சமூக
வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க