
Fire to Garlic
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உஜ்ஜைனி மாவட்டம் தியோலி என்ற கிராமத்தில் வசிப்பவர் சங்கர். விவசாயியான இவர், தன் நிலத்தில் விளைந்த வெள்ளைப் பூண்டுகளை (Garlic) விற்க மந்த்சவுர் சந்தைக்கு எடுத்துச் சென்றார். அங்குள்ள வியாபாரிகள் பூண்டுக்கு மிகவும் குறைந்த விலை நிர்ணயித்து இருந்தனர்.
பூண்டை எரித்த விவசாயி (Fire to the Garlic)
இதனால் சங்கருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தான் கொண்டு வந்திருந்த 100 கிலோ பூண்டுகளையும் விளைவிக்க 3 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாக சங்கர் கூறினார். ஆனால் வியாபாரிகள் 1 லட்சம் ரூபாய்க்குத்தான் அவற்றை வாங்க முடியும் என திட்டவட்டமாக கூறி விட்டனர்.
இதனால் கடும் கோபமும் விரக்தியும் அடைந்த சங்கர், தான் கொண்டு வந்திருந்த பூண்டுகளை தரையில் கொட்டி தீ வைத்தார்.
தகவல் அறிந்து வந்த சந்தை ஊழியர்கள் தீயை அணைத்தனர். மிகவும் ஆத்திரத்துடன் இருந்த சங்கரை சமாதானம் செய்தனர்.
மேலும் படிக்க
விலை சரிவால் வெங்காயத்தை தீயிட்டு கொளுத்திய விவசாயி!
கோயம்பேடு சந்தையில் இடமளித்தும் தக்காளி விலை குறையாதது ஏன்? - உயர்நீதிமன்றம்
Share your comments