வங்கிக்கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும்கூட பணம் எடுக்க முடியும் என்பது தெரியுமா? தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில், உங்கள் வங்கிக்கணக்கில் பேலன்ஸ் இல்லாவிட்டாலும் கூட 10,000 எடுக்கமுடியும்.
யாருக்கும் எப்போது வேண்டுமானாலும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அவசரத் தேவைகள் வரலாம். அந்த நேரத்தில், நம் வங்கிக்கணக்கில் காசு இல்லாமல் இருந்தால், எக்கச்சக்க சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லாத சூழலில் உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது? இதற்காகவே பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டத்தில் சூப்பர் வசதி உள்ளது.
ஜன் தன் யோஜனா
பிரதமர் ஜன் தன் யோஜனா (Jan Dhan Yojana) என்பது இருப்புத் தொகை தேவையில்லாத ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் (Zero Balance Account) ஆகும். ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் கணக்குகளின் என்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.
ஜன் தன் யோஜனா கணக்கில் ஓவர்டிராஃப்ட் (Overdraft) வசதியின் கீழ் பணம் இல்லாமலேயே 10,000 ரூபாய் வரை பணம் பெற்றுக்கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் உங்களுக்கு ரூபே கார்டு (Rupay Card) வழங்கப்படும். அதன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது, ஷாப்பிங் போன்றவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
என்ன செய்வது?
2014ஆம் ஆண்டில் ஜன் தன் யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதே ஆண்டில் ஆகஸ்ட் 28ஆம் தேதி திட்டம் தொடங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை ஜன் தன் கணக்குகளின் எண்ணிக்கை 41.6 கோடியாக உயர்ந்துள்ளது.
விபத்துக் காப்பீடு
ஓவர்டிராஃப்ட், ஏடிஎம் கார்டு மட்டுமல்லாமல் 2 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு வசதியும் ஜன் தன் கணக்கில் கிடைக்கிறது. எந்தவொரு வங்கியிலும் ஜன் தன் கணக்கு தொடங்கலாம். இந்தக் கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
1.73 லட்சம் பேருக்கு பென்சன் கிடையாது- தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் யூரியாத் தட்டுப்பாடு- குறுவை சாகுபடியில் சிக்கல்!