1. மற்றவை

1.73 லட்சம் பேருக்கு பென்சன் கிடையாது- தமிழக அரசு அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
1.73 lakh pensioners do not have pension!

சமூக பாதுகாப்பு பென்சன் பெற்றுவந்தவர்களில் இறந்துபோன ஓய்வூதியதாரர்களை தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது. இதனால் இவர்களுக்கு இனி பென்சன் கிடையாது.

சமூக பாதுகாப்பு பென்சன்

ஓய்வு காலத்தைக் கருத்தில்கொண்டு, சமூகத்தின் சிலத் தரப்பினருக்கு அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதாவது முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலமில்லா வேளாண் தொழிலாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், இலங்கை அகதிகள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பு பென்சன் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.200 கோடி

இந்நிலையில், சமூக பாதுகாப்பு பென்சன் பெற்றுவந்த ஓய்வூதியதாரர்களில் இறந்துபோன 1.73 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாயை சேமிப்பாக மாறுகிறது.

தகுதி இல்லாதவர்கள்

மேலும், தமிழகத்தில் 6147 பேருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த பென்சனை வருவாய் துறை நிறுத்தியுள்ளது. இதுபோக, ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி இல்லாத 18,656 பேரின் விவரங்களை தமிழ்நாடு அரசு சரிபார்த்து வருகிறது. ஆதார் அட்டை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு பதிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

வாழ்நாள் சான்றிதழ்

மத்திய, மாநில அரசு பென்சன் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று. இதன் வாயிலாக ஓய்வூதியதாரர் தொடர்ந்து பென்சன் பெறுவது உறுதிசெய்யப்படும்.

நடைமுறை

ஆனால், சமூக பாதுகாப்பு பென்சன் வாங்குவோரிடம் வாழ்நாள் சான்றிதழ் கேட்கப்படுவதில்லை. எனவே, அரசு தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டு, ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருக்கிறார்களா, பென்சன் பெறுவோர் தகுதி பெற்றவர்களா என்பது கண்டறியப்படும். இந்நிலையில், இறந்துவிட்ட 1.73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், தகுதியில்லாத 18,656 நபர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் சேமிப்பாகிறது.

மேலும் படிக்க...

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாடப் பழக்கங்கள்!

நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்!

English Summary: 1.73 lakh pensioners do not have pension! Published on: 14 June 2022, 11:37 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.