அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட வாக்குறுதிகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ, வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தாமதம் இல்லை
அப்போது பேசிய அவர், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருவதாகக் கூறினார். பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என்று கடந்த தேர்தலுக்கு முன்பாக திமுக உறுதியளித்திருந்தது. அந்த நம்பிக்கையில்தான் அரசு ஊழியர்கள் வாக்களித்தனர்.
முறையிட வாய்ப்பு
அரசு ஊழியர்களாகிய உங்களுடைய குறைகள் எதுவாக இருந்தாலும் உங்களது துறை அமைச்சரிடம் முறையிடலாம். அவர்கள், உங்கள் நட்போடு அணுகுமுறையை கொண்டிருப்பார்கள். அவர்களிடம் உங்கள் கோரிக்கையை தெரிவித்தால், உறுதியாக அது என்னுடைய கவனத்திற்கு அப்போதைக்கப்போது வந்து சேரும்.
சந்தேகம் வேண்டாம்
அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும்.
உங்களுடைய நம்பிக்கைக்கு நான் என்றைக்கும் பாத்திரமாக இருப்பேன். அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம். உங்களுடைய நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது.
எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் உங்களுக்காக, பல திட்டங்களைத் தீட்டி, உங்கள் வாழ்விலே வசந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்களோ, அதை நானும் ஏற்றுக்கொண்டு அதனை எந்நாளும் காப்பாற்றுவேன்.
இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க...
95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்- அதிர்ச்சியில் கூலித்தொழிலாளி!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.5600 சம்பளம்-இதுவும் சூப்பர் பிஸ்னஸ்தான்!