இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 August, 2021 3:10 PM IST
Nooru Naal Velai Thittam

நூறு நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021 இல் திரு. தியாகராஜன் அவர்கள் பல சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இதோ.

1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறுகளை மறுபரிசீலனை செய்ய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும்மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இதில் இணையும் பணியாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கி அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதனை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட் உரையில், நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டு அதன் ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ஆக அதிகரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்

  • 1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும், ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் துவங்கப்படும்.
  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடி மீண்டும் வழங்கப்படும். தமிழகத்தில் அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைப்பு செய்யப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் சீரமைக்கப்படும்.
  • மகளிர், மாற்றுத்திறனாளிகளின் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம் வழங்கப்படும். இலவச ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1303 ஆக அதிகரிக்கப்படும்.
  • உயர்கல்விக்காக ரூ.5,369.09 கோடி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும். ரூ.32599 கோடி பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
  • ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கி அரசு சமாளிக்கிறது, தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது என்றும் ரூ.19872 கோடி மின்சாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க:

TN Budget 2021: கிராமப்புற வீடு இல்லா குடும்பங்களுக்கு வீடு

English Summary: One hundred day work pay rises to Rs. 300!
Published on: 13 August 2021, 03:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now