1. செய்திகள்

TN Budget 2021: வேளான் பட்ஜெட் மீது உள்ள எதிர்பார்ப்புகள்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Agriculture Budget 2021

இந்த ஆண்டு முதன்முறையாக தமிழகத்தில் வேளான் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வரவிருக்கும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடக்கவிருக்கும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, வேளான் பட்ஜெட் குறித்து அரசின் மீது உள்ள எதிர்பார்ப்புகள் குறித்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் மீது உள்ள எதிர்பார்ப்புகள்

வேளான் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. தற்போது விவசாயத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு சுமார் 2.5 சதவிகிதமாக இருக்கிறது. இது விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கைக்கு விகிதாசார முறையில் முற்றிலும் பொருந்தாமல் இருக்கிறது.

வேளான் துறைக்காக ஒதுக்கீடு அந்த துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் மற்றும் துறைக்கு ஏற்றவாறு உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ரேஷன் கடைகளில் (Ration Shops), இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் மானிய விலையில் கிடைக்கிறது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நிலைமை இருப்பது பரிதாபமாக உள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

இதற்கு பதிலாக, மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை அரசு மானிய விலையில் வழங்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் கடன்களுக்கான செயல்முறையை எளிதாக்க வேண்டும். விவாயிகள் கடன்களுக்காக அலைகழிக்கப்படுவது அனைத்தும் தவிர்க்கபப்ட வேண்டும்.

சாகுபடி செலவு மற்றும் விவசாயிகளின் (Farmers) வருமானத்தை கணக்கிட்டு விவசாய பொருட்களின் விலைகளை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயத் துறைகளுக்கான சில மாற்றங்களை மத்திய அரசால் தான் செய்ய முடியும்.

கூடுதலாக, விவசாயம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் உள்ளாட்சி அமைப்புகளால் கையாளவேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மாநில அரசு கவனிக்கும் கவனிக்கும் செயல்முறை உருவாக்கப்படலாம்.

விவசாயிகளின் நலனுக்காகவும் விவசாயத் துறைக்கு உள்ள முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் பொருட்டு, வேளான் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் (TN Budget) மூலம் விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்ந்து அவர்களுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

மேலும் படிக்க:

தேசிய சமையல் எண்ணெய் திட்டத்தில் 11000 கோடி முதலீடு

மிகவும் முக்கியமான 7 விவசாய வணிக யோசனைகள்

English Summary: TN Budget 2021: Expectations on the Agriculture Budget! Published on: 10 August 2021, 12:34 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.