சிலிண்டர் விலை ஆயிரம் விலையைக் கடந்துவிட்ட நிலையில், விலைகுறைவாக, அதாவது , நீங்கள் வெறும் 750 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவில் கேஸ் சிலிண்டர் (எல்பிஜி சிலிண்டர்) விலை முன் எப்போதும் இல்லாத வகையில், கிடுகிடுவென அதிகரித்து ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால், நடுத்தரவாசிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.
டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.1053 ஆக உள்ளது. இந்நிலையில், குறைந்த விலையில் சிலிண்டரை வழங்க ஏதுவாக, பொதுமக்களுக்காக அரசு எண்ணெய் நிறுவனத்தால் ஒரு சிறப்பு வசதி தொடங்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் சமையல் சிலிண்டர்களை மலிவான விலையில் வாங்கலாம். அதாவது, அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் (இண்டேன்) ரூ.750க்கு சிலிண்டர் தருகிறது.
10 கிலோ
இந்த சிலிண்டரை வாங்க நீங்கள் 750 ரூபாய் மட்டுமே செலவழிக்க வேண்டும். இந்த சிலிண்டரின் சிறப்பு என்னவென்றால், அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக மாற்ற முடியும். இந்த சிலிண்டரின் விலை குறைவாக இருப்பதற்கான காரணம் சாதாரண சிலிண்டரை விட இது குறைவான எடை கொண்டதாகும். இதன் எடை 10 கிலோ மட்டுமே. இதன் பெயர் காம்போசிட் சிலிண்டர்.
காம்போசிட் சிலிண்டரின் விலை
டெல்லி - ரூ.750
மும்பை - ரூ.750
கொல்கத்தா - ரூ.765
சென்னை - ரூ.761
லக்னோ - ரூ.777
14.2 கிலோ சிலிண்டரின் விலை!
டெல்லி - ரூ.1053
மும்பை - ரூ.1052.50
சென்னை - ரூ.1068.50
கொல்கத்தா - ரூ.1079
லக்னோ - ரூ.1090.50
விரைவில் இந்த காம்போசிட் சிலிண்டர் அனைத்து நகரங்களிலும் கிடைக்கும். இந்த சிலிண்டர்கள் எடை குறைவு என்பதால்தான் இதன் விலை குறைவாக உள்ளது. இந்த சிலிண்டரின் சிறப்பு என்னவென்றால், அவை வெளிப்படையானவை. அதில் எவ்வளவு கேஸ் உள்ளது என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
28 நகரங்களில்
தற்போது, இந்த சிலிண்டர் 28க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது. ஆனால் விரைவில் அனைத்து நகரங்களிலும் இந்த சிலிண்டர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க...