Others

Sunday, 03 April 2022 11:49 AM , by: Elavarse Sivakumar

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அண்மையில் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு வாடகைச் சலுகையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால், இந்த சலுகை அரசு தரும் 2வது ஜாக்பாட்டாக அமையப் போகிறது.

அகவிலைப்படி உயர்வு!

நீண்ட காத்திருக்குப்புக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வைக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படியை உயர்த்திய பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி கிடைக்கும். அகவிலைப்படியுடன், ஊழியர்களின் வீட்டு வாடகைப் படியும் (HRA) அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பிறகு, ஊழியர்களின் சம்பளத்தில் மிகப் பெரிய உயர்வு இருக்கும்.

அதிகபட்ச HRA விகிதம் 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வீட்டு வாடகை சலுகை வழங்கப்படுகிறது. X பிரிவில் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 27 சதவீதம் HRA வழங்கப்படுகிறது. Y பிரிவு ஊழியர்களின் HRA 18 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இருக்கும். அதே நேரத்தில், Z வகுப்பின் HRA 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கும்.

கணக்கீடு

7வது ஊதிய கமிஷன் கணக்கீட்டின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.56,900 ஆகும். இதில் இருந்து 27 சதவீதமே, ஊழியரின் HRA வாகக் கணக்கிடப்படுகிறது.

எவ்வளவு உயரும்?

வீட்டு வாடகை சலுகை (HRA) = ரூ.56900 × 27/100 = ரூ.15363

மாதாந்திர HRA = ரூ.56,900 × 30/100 = ரூ 17,070

HRA மாதத்தில் மொத்த வேறுபாடு = ரூ.1707

மாதாந்திர HRA உயர்வு = ரூ.20,484

மேலும் படிக்க...

கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!

லட்சம் ரூபாயை எட்டிய பஞ்சு விலை- ஜவுளித்துறை முடங்கும் அபாயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)