சார்லட்டவுனைச் சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி போர்லே ஃபோஃபனா, செலினியம் என்ற ஆக்ஸிஜனேற்றத்தைச் சேர்ப்பதன் மூலம் தாவரப் பொருட்களை ஆரோக்கியமாக்குவதற்கான வழியினைக் கண்டுபிடித்துள்ளார். செலினியம் என்பது மண், நீர் மற்றும் சில உணவுகளில் காணப்படும் ஒரு கனிமமாகும். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உணவில் நுண்ணூட்டச்சத்துக்கு இது முக்கியமானது ஆகும்.
ஆராய்ச்சியாளர் போர்லே அதன் ஊட்டச்சத்து நன்மைகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது, அவரது கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. உருளைக்கிழங்கு இலைகளில் செலினியம் தெளிக்கப்பட்டபோது, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி பயிர்களை விரைவில் அழிக்கக்கூடிய தாமதமான ப்ளைட் நோயிலிருந்து தாவரங்களுக்கு பாதுகாப்பை அதிகரித்ததைக் கண்டுபிடித்துள்ளார்.
முதற்கட்டமாக, அவர்கள் உருளைக்கிழங்கு விதைகளை நடவு செய்வதற்கு முன் செலினியம் கரைசலில் ஊறவைத்து மண்ணில் விதைத்தனர். அப்போது வளரும் செடியின் இலைகளை மட்டும் சிகிச்சைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தால் போதும் என்று முடிவு செய்து சோதனை நிகழ்த்தியுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் தங்கள் சோதனைகளை கிரீன்ஹவுஸிலும், ஆய்வகத்திலும் என இரு இடங்களில் சோதனை செய்தனர். வெளிவந்த முடிவுகளால் ஃபோஃபானா-வுக்கு ஆச்சர்யம் வந்தது. அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சோதனைகளை நடத்தியதில் ஆய்வக சோதனைகள் வெற்றிகரமாக இருந்தபோதிலும், ஃபோபானா, உண்மையான கள அமைப்பில் செலினியத்தை முயற்சிக்க முடியாது என்றும் ஏனெனில் சோதனைகள் தாமதமாக ப்ளைட் வித்திகளை சுற்றுச்சூழலில் வெளியிடக்கூடும் என்றும் முடிவுக்கு வந்தார்.
கரிம உற்பத்தியாளர்கள், குறிப்பாக, தக்காளி அல்லது உருளைக்கிழங்கு பயிர்களில் தாமதமாக ஏற்படும் ப்ளைட்டை திறம்பட கட்டுப்படுத்த பயன்படுத்தக்கூடிய ஒரே ஒரு தயாரிப்பு மட்டுமே உள்ளது. அது தாமிரம் அல்லது காப்பர் சல்பேட் ஆகும். இது உருளைக்கிழங்கு பயிருக்கு ஒரு பேரழிவு நோயாகக் கருதப்படுகிறது. மேலும் அது ஒரு பயிரை அழிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆக்ஸிஜனேற்றம் மிகுந்த பலனளிப்பதை ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
விவசாயிகள் எப்போதும் தங்கள் பண்ணைகளில் தாமதமாக ஏற்படும் ப்ளைட் எனும் நோயை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய வழிகளைத் தேடும் நிலையில், செலினியம் ஒரு வகையான தீங்கற்ற பொருளாகவும், இயற்கையாக உருவாகும் ஒரு தனிமமாகவும் இருப்பதால், அது உற்பத்தியினைப் பெருக்கும் பொருளாக இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க