அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் மூத்த குடிமக்கள் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்டவை குறித்து விரிவான தகவல்களை பார்ப்போம்.
மூத்த குடிமக்கள் (Senior citizens)
தற்போது அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பெரும்பாலோர் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அதிகளவு வட்டி விகிதம் கிடைக்கிறது. தற்போது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் எந்த திட்டத்திலும் இல்லாத அளவுக்கு ஆண்டுக்கு 8.2% வரை வட்டி விகிதம் கிடைக்கிறது.
மேலும் இதில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் 30 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 55 வயது முதல் 60 வயது நிரம்பிய ஓய்வு பெற்றவர்கள் மற்றும் VRS எடுத்தவர்கள் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் வரிச் சலுகைகளும் பெற முடிகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்வதற்கான வசதியும் உள்ளது. இதை தொடர்ந்து நீங்கள் தனியாகவும் அல்லது கூட்டுசேர்ந்தும் கணக்கு தொடங்கலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் இருந்து பலமுறை பணம் எடுக்க அனுமதி கிடையாது.
மேலும் படிக்க
அரசுப் பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!
இயற்கை விவசாயத்திற்கு மவுசு: திருப்பதி லட்டு இனி இப்படித் தான் தயாரிக்கப்படும்!