Others

Monday, 05 July 2021 04:34 PM , by: Sarita Shekar

Aadhaar card

நம் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியம். மத்திய அரசின்  திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளவும்  எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளவும் ஆதார் அவசியம். மக்கள் தங்கள் ஆதார் அட்டை தகவல்களைப் புதுப்பிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்போது நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது இந்த செயல்முறை மிகவும் எளிதாக இருக்கும்.

ஆதார் தொடர்பான ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க, UDAI ஹெல்ப்லைன் எண் 1947 ஐத் தொடங்கியுள்ளது, இது 12 மொழிகளில் கிடைக்கிறது. இங்கே உங்கள் ஆதார் தொடர்பான ஒவ்வொரு பிரச்சினையும் தீர்க்கப்படும். UIDAI (Unique Identification Authority of India) இந்த தகவலை ஒரு ட்வீட்டில் மூலம் தெரிவித்துள்ளது.

UIDAI ட்வீட் செய்தது

ஆதார் ஹெல்ப்லைன் 1947 இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி மற்றும் உருது ஆகிய 12 மொழிகளில் கிடைக்கிறது என்று யுஐடிஏ ட்வீட் செய்துள்ளது. ஆதார் தொடர்பான ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு இங்கே உங்களுக்கு வழங்கப்படும்.

நீங்கள் எந்ததெந்த நேரத்தில் அழைக்க முடியும்

ஆதார் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை அழைக்கலாம். இது தவிர, ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த எண்ணை அழைக்கலாம்.

அஞ்சல் வழியாக புகார் அளிப்பதற்கு

இது தவிர, நீங்கள் அஞ்சல் மூலம் புகார் செய்ய விரும்பினால், உங்கள் பிரச்சினையை help@uidai.gov.in என்ற மின்னசலுக்கு எழுதி அனுப்ப வேண்டும். UIDAI இன் அதிகாரிகள் இந்த அஞ்சலை அவ்வப்போது சரிபார்த்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்கிறார்கள். மின்னஞ்சல் மூலம் கேட்கப்படும் பதிலளித்து மக்களின் குறைகளை தீர்க்கிறது.

மேலும் படிக்க

PAN மற்றும்-Aadhaar அட்டையை இணைக்கத் தவறினால், ரூ.10,000 அபராதம்!

தொலைபேசி எண் இல்லாமல் ஆதார் அட்டை பதிவிறக்கம்: எளிதான வழிமுறைகள் இங்கே!

Jan Dhan Yojana : பிரதம மந்திரி திட்டத்தின் அதிக லாபத்தை பெற உங்கள் ஆதார் அட்டையை இணைக்க எளிய வழி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)