ஆதார் அட்டை இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது. அரசு வேலையாக இருந்தாலும் சரி, அரசு சாரா வேலையாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் ஆதார் எண் அவசியம். எனவே ஆதார் கார்டு அப்டேட்டாக இருக்க வேண்டும். ஆதார் அப்டேட்கள் வாடிக்காயளர்கள்சில சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அப்படி சிக்கல் ஏற்பட்டால் நீங்கள் எளிதாக புகாரைப் பதிவு செய்யலாம்.
ஆதார் (Aadhar)
ஆதார் தொடர்பான எந்தவொரு புகாருக்கும், உங்கள் அருகிலுள்ள ஆதார் மத்திய/மண்டல அலுவலகத்தை நீங்கள் பார்வையிடலாம் என்று UIDAI அமைப்பு தெரிவித்துள்ளது. ஆதார் தொடர்பான புகாரை அங்கே சமர்ப்பிக்கலாம். உங்கள் அருகில் உள்ள ஆதார் மையம் / மண்டல அலுவலகம் பற்றிய தகவலுக்கு https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ என்ற லிங்கை கிளிக் செய்து பார்வையிடலாம்.
ஆதார் பயனர்களின் வசதிகளை மனதில் வைத்து, UIDAI ஒரு குறைதீர்ப்பு போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் 2 மொழிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். இதன் மூலம், உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
இதனுடன், ஒரு இலவச சேவை எண்ணும் உள்ளது. இதன் கீழ் நீங்கள் ஆதார் தொடர்பான புகாரை பதிவு செய்யலாம். இதற்கு 1947 என்ற எண்ணை அழைக்க வேண்டும். இந்த எண்ணின் மூலம் ஆதார் அட்டையின் நிலை, புகார் நிலை, ஆதார் மையத் தகவல்களையும் பெறலாம். மேலும், help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
ஆதார் அப்டேட்டுக்கு உங்களுடைய மொபைல் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியம். மொபைல் நம்பரை அப்டேட்டாக வைத்திருப்பதன் மூலம் ஓடிபி சார்ந்த சரிபார்ப்புகளை மிக எளிதாக முடிக்கலாம். ஒருவேளை உங்களுடைய சரியான மொபைல் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
மேலும் படிக்க
PF பென்சன் பயனாளிகளுக்கு புதிய வசதி: இனிமேல் ரொம்ப ஈசிதான்!
தொழில் தொடங்கி சாதிக்க ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் தொழில்!