நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 November, 2023 12:01 PM IST
SBI junior associates Recruitment

இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது எஸ்பிஐ கிளார்க் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. www.sbi.co.in/careers இல் எஸ்பிஐ கிளார்க்/ஜூனியர் அசோசியேட்ஸ் பிரிவில் மொத்தம் 8424 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கடந்த நவம்பர் 17 ஆம் தேதி முதல் பலரும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வரும் நிலையில் விண்ணப்பிக்க கடைசித்தேதி  07 டிசம்பர் 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியான விவரங்களுடன் பதவிக்கு விண்ணப்பிப்பதை உறுதிசெய்யவும். இல்லையெனில், உங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ளப்படாது. SBI கிளார்க் 2023 ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான அத்தியாவசிய விவரங்களையும், பணியிடங்களுக்கான தகுதி வரம்பும் பின்வருமாறு-

  • தேர்வின் பெயர்- SBI கிளார்க் தேர்வு 2023
  • post name:  ஜூனியர் அசோசியேட்ஸ் (Junior Associates) (sales and customer support)
  • காலியிடம்: 8424
  • பணியிடம்- மாநில வாரியாக
  • தேர்ந்தெடுக்கப்படும் முறை: முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு (prelims and mains exams)

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது பிரிவினர்/OBC/EWS- ரூ. 750
  • SC/ST/PwBD/ ESM/DESM- கட்டணமில்லை.

தேவையான ஆவணங்கள்: புகைப்படம், கையொப்பம், இடது கை கட்டைவிரல் பதிவு, கையால் எழுதப்பட்ட அறிவிப்பு (handwritten declaration) , SBI பயிற்சி சான்றிதழ் (SBI apprenticeship certificate) (தேவைப்படுமாயின்)

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.sbi.co.in/careers

கல்வித் தகுதி: 31 டிசம்பர் 2023 (31/12/2023) இன் படி விண்ணப்பிக்கும் நபர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (graduate)

வயது வரம்பு: (1/04/2024)-ன் படி விண்ணப்பிக்க குறைந்தப்பட்ச வயது 20 , அதிகப்பட்ச வயது 28. இட ஒதுக்கீடு பிரிவின் கீழ் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு நடைப்பெறும் தேதி: முதல்நிலை தேர்வு வருகிற ஜனவரி மாதமும், முதன்மைத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதமும் நடைப்பெறும். அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாயிலாக முதற்கட்டத் தேர்வானது (preliminary exam) 100 மதிப்பெண்களுக்கான அப்ஜெக்டிவ் வினாக்களுடன் நடத்தப்படும். ஆங்கில மொழி, எண் திறன் மற்றும் பகுத்தறியும் திறன் ஆகிய (English language, Numerical Ability and Reasoning Ability) மூன்று பிரிவுகளிடமிருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்நிலைத் தேர்வில் வென்றால் மட்டுமே, மெயின்ஸ் தேர்வுக்கு தகுதிப்பெற முடியும். மேலும் தேர்வு தொடர்பான அறிவிப்பினை முழுமையாக தெரிந்துக்கொள்ள கீழ்க்காணும் லிங்கினை க்ளிக் செய்க.

SBI Recruitment 2023

இதையும் காண்க:

வல்வோடினியா- பிறப்புறுப்பு பகுதியில் தாங்க முடியாத வலிக்கு காரணம் இதுதானா?

இறங்கமாட்டேனு அடம்பிடிக்கும் தங்கம்- மீண்டும் விலை உயர்வு!

English Summary: Recruitment of 8424 vacancies in SBI junior associates
Published on: 21 November 2023, 12:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now