MFOI 2024 Road Show
 1. வாழ்வும் நலமும்

வல்வோடினியா- பிறப்புறுப்பு பகுதியில் தாங்க முடியாத வலிக்கு காரணம் இதுதானா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Vulvodynia- unexplained pain

உங்கள் பிறப்புறுப்பு சுற்றி தொடர்ந்து வலியுணர்வு, எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளதா? உங்களுக்கு வல்வோடினியா இருக்கலாம். இது இயற்கையாகவே சரியாகுமா என்றால் நிச்சயம் இல்லை. உங்களுக்கு தொடர்ந்து வலி அல்லது அசௌகரியம் இருக்கும் பட்சத்தில் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

கோடை காலத்தில், இறுக்கமான உடைகள் மற்றும் வியர்வை காரணமாக அடிக்கடி உடல் பாகம் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் எரிச்சலை அனுபவிக்கிறோம். இது வழக்கமான ஒன்று தான், ஆனால் இதுவே தொடர்ந்து நீடித்தால் உடலில் ஏதோ பிரச்சினைக்கான அறிகுறி என்பதை முதலில் உணருங்கள்.

வல்வோடினியா என்றால் என்ன?

ஒருவரின் யோனி (வுல்வா) திறப்பைச் சுற்றி நாள்பட்ட மற்றும் தொடர்ச்சியாக நிலவும் வலியினை தான் வல்வோடினியா என அழைக்கிறோம். சில பெண்களுக்கு இது கடுமையான வலியாக இருக்கலாம், ஒரு சிலருக்கு எரிச்சல் மற்றும் அசௌகரிய உணர்வு இருக்கலாம்.

வல்வோடினியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் உட்காரவோ, உடலுறவு கொள்ளவோ முடியாது. இருப்பினும், பல பெண்களுக்கு இந்தப் பிரச்சினையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை என்றும், சொன்னால் நம்மை தவறாக நினைப்பார்களோ என்கிற உணர்வும் மிகுதியாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

வல்வோடினியா தானாக சரியாகுமா?

இது எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடியது மற்றும் தானாகவே போய்விடாது என்கிறார்கள் மருத்துவர்கள். அறிகுறி தென்பட்டாலோ அல்லது உறுதிசெய்யப்பட்டாலோ மருத்துவரை அணுகுவது அவசியம்.

வல்வோடினியாவின் அறிகுறிகள் என்ன?

பிறப்புறுப்பு பொதுவாக சாதாரணமாக இருப்பது போல் தான் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் நாள்பட்ட வலியை அனுபவிப்பார். அதைத் தொடர்ந்து பிறப்புறுப்பினைச் சுற்றி எரியும் உணர்வு, வலி மற்றும் துடித்தல் ஆகியவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் குறைந்த தீவிரத்தில் தோன்றும், இருப்பினும், நோயாளி நீண்ட நேரம் உட்கார்ந்தால், வலி மோசமாகிவிடும்.

இந்த நிலையில் உள்ள ஒரு பெண் உடலுறவு கொள்ள முயற்சித்தால் அல்லது மாதவிடாய் காலத்தில் டம்போன்களைப் பயன்படுத்தினால், தொடுதல் அல்லது செருகுவது நிலைமையை மேலும் மோசமாக்கும்.

வல்வோடினியாவின் முக்கிய காரணங்கள் என்ன?

வல்வோடினியாவின் முக்கிய காரணம் நரம்பு சேதம் ஆகும். இது பிரசவம், அறுவை சிகிச்சை, தொற்று மற்றும் ஒரு நரம்பு பிரிவு காரணமாக நிகழலாம். இது தொற்றும் தன்மையுடையது அல்ல என்பதால் தீவிரமானதல்ல என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இது வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும். ஆனால் இந்த பிரச்சினை உங்கள் துனையுடன் உறவுக் கொள்ளும் தன்மையினை பாதிக்கும் மற்றும் உங்கள் சுயமரியாதை, நம்பிக்கை மற்றும் மனச்சோர்வுக்கு காரணமாக இது காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

உடலுறவுக்குப் பின் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் என்ன?

மருத்துவர் நிராகரிக்க முயற்சிக்கும் வல்வோடினியாவின் பிற காரணங்கள்:

 • சோப்புகள், குளியல், வல்வால் வாஷ் மற்றும் மருந்து கிரீம்கள் ஆகியவற்றிற்கு ஒவ்வாமை எதிர்வினை அல்லது உணர்திறன்
 • தொடர்ந்து ஏற்படும் ஹெர்பெஸ் தொற்று
 • யோனி தொற்று அல்லது தொடர்ச்சியான யோனி த்ரஷ்
 • பெஹ்செட் நோய், பிறப்புறுப்பு புண்களுக்கு வழிவகுக்கும் இரத்த நாளங்களின் கோளாறு
 • லிச்சென் ஸ்க்லரோசஸ் அல்லது லிச்சென் பிளானஸ் என்பது ஒரு தோல் நிலை. இது இப்பகுதியில் புண் மற்றும் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துகிறது.
 • குறிப்பாக மாதவிடாய் நிறுத்த காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வீழ்ச்சி யோனியில் வறட்சிக்கு வழிவகுக்கும்.
 • Sjögren's syndrome- நோயெதிர்ப்பு மண்டலத்தின் கோளாறு காரணமாக யோனியில் வறட்சியை ஏற்படுத்தும்.

வல்வோடினியாவை எவ்வாறு கண்டறிவது?

நிலையைக் கண்டறிய மருத்துவர் Q-tip அல்லது swab சோதனையை மேற்கொள்வார். இருப்பினும், நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன.

 • யோனியுடன் நெருங்கிய தொடர்பு பகுதியில்காற்றோட்டமான ஆடைகளை அணிதல்
 • இப்பகுதியில் வாசனை திரவியங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல்
 • இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்தல்
 • ஐஸ் பேக் அல்லது கூல் ஜெல் பேக்குகளைப் பயன்படுத்துதல்
 • தளர்வான கால்சட்டை, பேன்ட் ஆகியவற்றை அணியும் முடிவுக்கு மாறுதல்

வல்வோடினியாவை எவ்வாறு சரிசெய்வது?

மருத்துவர் பாதிப்பின் தன்மையினை மதிப்பீடு செய்து, அதற்கான சிகிச்சை முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என டாக்டர் கேரா தெரிவித்துள்ளார். ஒரு சிலருக்கான சிகிச்சைகளில் மயக்க மருந்து பயன்பாடுகள் மற்றும் லூப்ரிகண்டுகள் ஆகியவை அடங்கும்.

நரம்பு தேய்மானம் மற்றும் பிசியோதெரபியுடன் கூடிய சிகிச்சையும் சிலருக்கு பரிந்துரைக்கப்படும். சில வாய்வழி மாத்திரைகள் உள்ளன. அரிதான சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம். நீங்கள் வலியை அனுபவித்தால், பாராசிட்டமால் போன்ற சாதாரண வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் அது உங்களுக்கு உதவாது. நோயாளி பல மாதங்களுக்கு மருந்தை உட்கொள்ள வேண்டியிருக்கும். வலி கடுமையாக இருந்தால், அதனை குறைப்பதற்கு ஊசி செலுத்தலாம் (மருத்துவரிடம்).

சில யோகா பயிற்சிகள் பிரச்சினைக்கு நிவாரணம் அளிக்கும். அத்தகைய பயிற்சிகள் யோனியைச் சுற்றியுள்ள தசைகளை தளர்த்தவும் உதவும். ஒரு சில நோயாளிகள் தங்கள் பாலியல் வாழ்க்கையை இயல்பாக்குவதற்கு அவர்களது துணையுடன் சேர்ந்து உளவியல் ஆலோசனையையும் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் காண்க:

அரிசி முதல் சின்னாளப்பட்டி சேலை வரை- கலக்கும் ”மதி சந்தை”

Turmeric for stomach: வயிற்றுப்புண் பிரச்சினைக்கு தீர்வு தருமா மஞ்சள்?

English Summary: Vulvodynia is unexplained pain in the vulva Published on: 20 November 2023, 03:50 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.