டேராடூனிலுள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற 03.06.2023 தேதி நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் பயனடையுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸ் இளவரசர் எட்டாம் எட்வர்டு, இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியை 1922-இல் துவக்கி வைத்தார். தற்போது இதனை ஒன்றிய அரசின் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 138 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான 8-ஆம் வகுப்பில் பயில மாணவர் சேர்க்கை நடைப்பெற உள்ளது. அதுதொடர்பாக அறிவிப்பினை குறிப்பிட்டு இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
தேர்வில் பங்கேற்க தகுதிகள்:
வயது: 02.01.2011 முதல் 01.07.2012 வரைக்குள் பிறந்தவர்கள் மட்டும் (ஆண்/பெண் இருபாலரும்),
கல்வித்தகுதி: 1:1.2024 அன்று இராணுவக் கல்லூரியில் சேரும் சமயம் 7-ஆம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் அல்லது 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு எழுத வேண்டிய பாடங்கள்:
- ஆங்கிலம் - 125 மதிப்பெண்கள்
- கணிதம் - 200 மதிப்பெண்கள்
- பொது அறிவு - 75 மதிப்பெண்கள்
- Viva-voce - 50 மதிப்பெண்கள் (only for candidates who qualify in the written exam)
மொத்தம் 450 மதிப்பெண்கள் அடங்கிய தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவம் பெறும் வழிமுறைகள்-
விண்ணப்ப கட்டணம்- பொது பிரிவினருக்கு ரூ.600/-, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.555/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தி கமாண்டென்ட், ஆர்ஜஎம்சி, டேராடூன் என்ற பெயரில் வங்கி வரைவோலை எடுத்து எஸ்பிஐ, டெல்பவன், டேராடூன், உத்தரகாண்ட் என்ற இடத்தில் மாற்றத்தக்க வகையில் (வங்கி கோடு 01576) எடுத்து " தி கமாண்டென்ட், தி ராஷ்டிரியா இந்தியன் மிலிடரி காலேஜ், கர்கி கேன்ட், டேராடூன், உத்தரகாண்ட், பின்கோடு- 248003" என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பபடிவம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இணைதள முகவரி: www.rimc.gov.in
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி தேதி: 15.04.2023
பூர்த்தி செய்த விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாடு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் ஆணையம், சென்னை-03.
மேலும் விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகிடுமாறு ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே தகுதியும். விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
The Ocean Cleanup- கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் புதிய மைல்கல்