1. கால்நடை

மாட்டு கோமியம் முதல் மனித சிறுநீர் வரை ஆய்வு- அதிர்ச்சி அளித்த IVRI ரிப்போர்ட்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
In no case can urine be recommended for human consumption says IVRI

மாட்டு சிறுநீரில் (கோமியம்) தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கிறது மற்றும் அவை நேரடியாக மனித நுகர்வுக்கு ஏற்றது அல்ல என்று பரேலியை தளமாகக் கொண்ட ICAR-இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கோமியம் அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என தகவல் பரப்பி வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று பிஎச்.டி மாணவர்களுடன் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த போஜ் ராஜ் சிங் தலைமையில், ஆரோக்கியமான பசுக்கள் மற்றும் காளைகளின் சிறுநீர் மாதிரிகளை சேகரித்து நடத்திய ஆய்வில் குறைந்தது 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கோமியம் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இது வயிறு தொடர்பான நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் ஆன்லைன் ஆராய்ச்சி இணையதளமான ரிசர்ச்கேட்டில் வெளியிடப்பட்டுள்ளன. இன்ஸ்டிடியூட்டில் தொற்றுநோயியல் துறையின் தலைவர் போஜ் ராஜ் சிங் குறிப்பிடுகையில், "பசு, எருமைகள் மற்றும் மனிதர்களின் 73 சிறுநீர் மாதிரிகளின் புள்ளிவிவர பகுப்பாய்வில் எருமையின் சிறுநீரிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடானது பசுக்களை விட மிகவும் அதிகமாக உள்ளது என தெரிய வருகிறது. எருமையின் சிறுநீரில் S Epidermidis மற்றும் E Rhapontici போன்ற பாக்டீரியாக்கள் உள்ளன என்றார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித நுகர்வுக்கு சிறுநீரை பரிந்துரைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், உள்ளூர் பால் பண்ணைகளில் இருந்து சாஹிவால், தார்பார்கர் மற்றும் விந்தவானி ஆகிய மூன்று வகையான மாடுகளின் சிறுநீர் மாதிரிகள் மற்றும் எருமைகள் மற்றும் மனிதர்களின் மாதிரிகளை சேகரித்தோம்.

ஜூன் மற்றும் நவம்பர் 2022-க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட எங்கள் ஆய்வில், வெளிப்படையாக ஆரோக்கியமான நபர்களிடமிருந்து சிறுநீர் மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றில் கணிசமான விகிதத்தில் நோய்க்கிருமி பாக்டீரியாக்கள் உள்ளன.

"சிலர் காய்ச்சி வடிகட்டிய சிறுநீரில் தொற்று பாக்டீரியாக்கள் இல்லை என்று வாதிடுகின்றனர்." நாங்கள் அதை மேலும் ஆராய்ச்சி செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், பல சப்ளையர்களால் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) வர்த்தக முத்திரை இல்லாமல் இந்திய சந்தையில் பசுவின் சிறுநீர் பரவலாக விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், IVRI இன் முன்னாள் இயக்குனர் ஆர்.எஸ்.சௌஹான் கூறுகையில் "நான் 25 ஆண்டுகளாக பசுவின் சிறுநீரை ஆராய்ச்சி செய்து வருகிறேன், காய்ச்சி வடிகட்டிய மாட்டு சிறுநீர் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் மற்றும் கோவிட் நோய்க்கு எதிராக உதவுகிறது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். காய்ச்சி வடிகட்டிய மாட்டு சிறுநீர் அருந்துவதை தற்போதும் நான் பரிந்துரைக்கிறேன் என்றார்."

மேலும் காண்க:

புலிகளின் எண்ணிக்கையில் அடிவாங்கிய மேற்கு தொடர்ச்சி மலை- வனத்துறையினர் குழப்பம்

English Summary: In no case can urine be recommended for human consumption says IVRI Published on: 11 April 2023, 11:17 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.