Others

Friday, 18 March 2022 09:48 PM , by: Elavarse Sivakumar

SBI வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.342யைச் செலுத்துவதன் மூலம் ரூ4 லட்சத்தைப் பரிசாக வெல்ல முடியும். நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான SBI, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு,ரூ.4 லட்சத்தை வெறும் 342 ரூபாய்க்கு வழங்குகிறது .

கோவிட் 19 பாதிப்பை எதிர்கொண்ட பிறகு, காப்பீடு குறித்த மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் காப்பீடு கிடைக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த வரிசையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மிகக் குறைந்த பணத்தில் காப்பீட்டு வசதியை வழங்குகிறது. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகிய அரசாங்கத்தின் திட்டங்கள் உள்ளன, இது உங்களுக்கு ரூ 4 லட்சம் வரை காப்பீடு அளிக்கிறது. மிக முக்கியமாக, இதற்கு நீங்கள் ரூ.342 மட்டுமே செலுத்த வேண்டும்.

ரூ. 4லட்சம் 
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து இந்த இரண்டு திட்டங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளது.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ், காப்பீடு செய்தவர் விபத்தில் இறந்தாலோ அல்லது முற்றிலும் ஊனமுற்றாலோ, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்தவர் பகுதியளவு அல்லது நிரந்தரமாக ஊனமுற்றவராக இருந்தால், அவருக்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். இதில், 18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் காப்பீடு செய்யலாம். இந்த திட்டத்தின் ஆண்டு பிரீமியமும் ரூ.12 மட்டுமே ஆகும்.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ், காப்பீடு செய்தவரின் மரணத்தில் நாமினிக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 18 முதல் 50 வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இந்த திட்டத்திற்கும் நீங்கள் ஆண்டு பிரீமியமாக 330 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். இவை இரண்டும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 1 முதல் மே 31 வரை காப்பீடு

இந்த காப்பீடு ஜூன் 1 முதல் மே 31 வரை இருக்கும். இதற்கு வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். வங்கிக் கணக்கு மூடப்பட்டதன் காரணமாகவோ அல்லது பிரீமியம் கழிக்கப்படும் போது கணக்கில் போதுமான இருப்பு இல்லாத காரணத்தினாலும் காப்பீடு ரத்து செய்யப்படலாம்.

மேலும் படிக்க...

அரிசி கிலோ ரூ.448- பால் லிட்டர் ரூ.263, ஒரு சவரன் தங்கம் ரூ.1.5லட்சம்!

கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.80 உயர்வு- சிக்கன் ப்ரியர்களுக்கு அதிர்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)