1. வாழ்வும் நலமும்

அரிசி கிலோ ரூ.448- பால் லிட்டர் ரூ.263, ஒரு சவரன் தங்கம் ரூ.1.5லட்சம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 448 per kg of rice - Rs 263 per liter of milk, Rs 1.5 lakh per savaran gold!

ஒரு நாட்டில் அதிபருக்கு எதிராக வெடித்தக் கலவரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஒரு கிலோ அரிசியை 448 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாலை 263 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் கொடுமை அரங்கேறிவருகிறது. இலங்கையில்தான் இந்தக் கொடுமை நடக்கிறது. அங்கு அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராகத் தலைநகர் கொழும்புவில், போராட்டம் வெடித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள், ராஜபக்சேவை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி தெருக்களில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசுத் திணறி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து எரிவாயு இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் மிகப்பெரிய Gas நிறுவனங்களான லிட்ரோ Gas மற்றும் லாக்ஸ் Gas நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

இதற்கிடையே இலங்கை நிதி அமைச்சர், பசில் ராஜபக்சே நேற்று டெல்லி வந்தார். அவர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள நிதியுதவிக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த பசில் ராஜபக்சே, வரும் 30-ந்தேதி இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்தார்.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.260 ஆக சரிந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது.
கலவரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஒரு கிலோ அரிசியை (இந்திய ரூபாயில்) 448 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாலை 263 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் கொடுமை அரங்கேறிவருகிறது. ஆப்பிள் ஒன்றின் விலை ரூ.150 என்றால், பேரீச்சம்பழம் கிலோ ரூ.900-ஐ தொட்டிருக்கிறது.

ரூ.283

பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283 என்றும், டீசல் ஒரு லிட்டர் ரூ.176 என்றும் புதிய சாதனை’ படைத்திருக்கின்றன. இதன் காரணமாக பல வாகனங்கள் வீதியோரமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டன. தங்கத்தின் விலையும் சவரன் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே அதிகபட்ச உயர்வு ஆகும்.

மேலும் படிக்க...

கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.80 உயர்வு- சிக்கன் ப்ரியர்களுக்கு அதிர்ச்சி!

மாரடைப்பைத் தடுக்கும் பழம்- தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும்!

 

English Summary: Rs 448 per kg of rice - Rs 263 per liter of milk, Rs 1.5 lakh per savaran gold! Published on: 17 March 2022, 11:50 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.