உங்கள் மொபைல் வழியாக ரூ.8 லட்சம் வரை கடன் வழங்கும் சூப்பர் திட்டத்தை இந்த வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தத்திட்டம் வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் எனவும், நிதிநெருக்கடி நேரத்தில் பெரிதும் உதவும் எனவும் வங்கி நம்புகிறது.
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் இப்போது ரூ.8 லட்சம் வரை முழு பலனைப் பெறலாம். PNB இன்ஸ்டா லோன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் PNB வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
இந்த திட்டத்தின் மூலம் 8 லட்சம் ரூபாய் வரை வங்கி கடனாக வழங்குகிறது. நீங்கள் தனிநபர் கடன் வாங்க விரும்பினால், அதற்கு உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டால் போதும், இனி, நீங்கள் எளிதாக கடன் பெறுவீர்கள்.
பெறுவது எப்படி?
இந்தக் கடன் திட்ட அறிவிப்பை PNB தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது. இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் PNB One பயன்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். PNB One Mobile App மூலம் PNB Insta கடன் வசதியைப் பெறமுடியும். மேலும், 18001808888 என்ற கட்டணமில்லா எண் மூலமாகவும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தகுதி
பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த கடனை மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, tinyurl.com/t3u6dcnd என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
-
நீங்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், https://instaloans.pnbindia.in/personal-loan/verify-customer#! என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று நேரடியாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
-
அதில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
-
பின்னர் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
-
அதன் விண்ணப்பத்திற்கு தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்.
-
உங்களின் விண்ணப்பம் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, கடன் வழங்கப்படும்.
மேலும் படிக்க...