Flipkart Discount Offer: Realme ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை மனதில் வைத்து, Flipkart-ல் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரியல்மீ ஸ்மார்ட்போனை வெறும் ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.
Realme 9 ஸ்மார்ட்போன்
Realme 9 (Stargaze White, 128 GB) (6 GB RAM) வேரியண்ட் ஸ்மார்ட்போன், இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.20,999. பிளிப்கார்ட்டின் தள்ளுபடி விற்பனையில் இந்த ஸ்மார்போனுக்கு 19% தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடிக்குப் பிறகு ரியல் மீ 9 ஸ்மார்ட்போனினை ரூ.16,999-க்கு வாங்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுதவிர, கூடுதலாக இன்னும் அதிக தள்ளுபடியைப் பெறலாம்.
Realme 9 ஸ்மார்ட்போன் தற்போதைய ஆஃபரில் ரூ.16999 விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர Flipkart நிறுவனம் ஸ்மார்ட்போனை வாங்கும்போது 16000 எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்குகிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெற, நல்ல நிலையில் உள்ள ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இதைப் பெறவேண்டும் என்றால் எக்ஸ்சேஞ்ச் போனஸை நீங்கள் முழுமையாக பெற்றால் வெறும் 999 ரூபாய் மட்டுமே நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். எஞ்சியிருக்கும் தொகை முழுவதும் உங்களுக்கு தள்ளுபடியாக கழிக்கப்பட்டுவிடும்.
மேலும் படிக்க
மீனவர்களுக்கு டீசல் மானியம்- அரசின் அதிரடி உத்தரவு!
இலவச ரேஷன் புதிய அப்டேட்! வெளியானது மகிழ்ச்சி செய்தி!!