Others

Wednesday, 15 June 2022 10:34 AM , by: Elavarse Sivakumar

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் சம்பள கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது பிரபல வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வங்கியில் இந்தப் புதியக் கணக்கைத் தொடங்குவதன் மூலம், பல்வேறு சலுகைகளை நீங்களும் பெற முடியும்.

அரசு ஊழியர்களுக்காகவே பிரத்யேகமான சம்பள கணக்கை (Salary Account) கோட்டக் மஹிந்த்ரா வங்கி (Kotak Mahindra Bank) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சம்பளக் கணக்கின் பெயர் கோட்டக் நேஷன் பில்டர்ஸ் சேலரி அக்கவுண்ட் (Kotak NationBuilders Salary Account).

தகுதி

மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும் இந்த கோட்டக் நேஷன் பில்டர்ஸ் சம்பளக் கணக்கை தொடங்கிக்கொள்ளலாம். இந்த சம்பளக் கணக்கில் பல்வேறு அம்சங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன.

ஜீரோ பேலன்ஸ்

இதுவொரு வாழ்நாள் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். அதாவது, கோட்டக் நேஷன் பில்டர்ஸ் சம்பள கணக்கு வைத்திருப்போர் வாழ்நாள் முழுவதும் மினிமம் பேலன்ஸ் பராமரிக்கத் தேவையில்லை.

நோ சர்வீஸ் சார்ஜ்

சர்வீஸ் சார்ஜ் இல்லாத இலவச லாக்கர் வசதி உண்டு. மாதம் 2 லட்சம் ரூபாய் வரை இலவசமாக டெபாசிட் செய்துகொள்ளலாம். மாதத்துக்கு 30 பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம்.

டெபிட் கார்டு

கணக்குதாரர்களுக்கு இலவச ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு (Rupay Platinum Debit Card) வசதி உண்டு. மேலும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கூடுதல் டெபிட் கார்டு வழங்கப்படும்.

பிற அம்சங்கள்

  • 50 லட்சம் ரூபாய் வரை தனிநபர் விபத்துக் காப்பீடு

  • சாலை மற்றும் ரயில் விபத்தால் ஊனமுற்றவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை காப்பீடு

  • குறிப்பிட்ட இந்திய பிராண்டுகளின் பொருட்களை வாங்கும்போது 5% கேஷ்பேக் சலுகை

  • உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் Lounge பயன்படுத்த அனுமதி.

  • குழந்தைக்கு 4 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன். இந்த கடனுக்கு வட்டி சலுகை உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் உண்டு.

  • மக்களே நீங்கள் அரசு ஊழியராக இருந்தால், உடனடியாக இந்த வங்கியில் சம்பளக் கணக்கைத் தொடங்கி அத்தனைச் சலுகைகளையும் பெறத் தவறாதீர்கள்.

மேலும் படிக்க...

மத்திய அரசு ஊழியராக ஆசையா?ரூ.1 லட்சம் சம்பளத்தில் விமானத்துறையில் வேலை!

1.73 லட்சம் பேருக்கு பென்சன் கிடையாது- தமிழக அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)