அரசு ஊழியர்கள் மத்திய பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக மத்திய அரசு ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவற்றை அறிவிக்கும்போது, அதனைப் பின்பற்றி மாநில அரசுகளுக்கும், தங்கள் ஊழியர்களுக்கும் அதே சலுகைகளை வழங்குவது வாடிக்கை.
எதிர்பார்ப்பு
இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாகக் பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால், மத்திய அரசு ஒரு சலுகையை அறிவித்தால், அது விரைவில் தங்களையும் வந்தடையும் என்று, மாநில அரசு ஊழியர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.அந்த வகையில், மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
முதலமைச்சர் அறிவிப்பு
இந்நிலையில் அது தொடர்பான அறிவிப்பை கர்நாடக மாநில முதலமைச்சர், பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த மாதத்தில் ஏழாவது ஊதியக் குழு அமலுக்கு வருகிறது.
அக்டோபர் முதல்
கர்நாடக மாநில அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பதற்கான 7ஆவது ஊதியக் குழு தொடர்பான இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய ஊதிய விகிதம் அடுத்த (அக்டோபர்) மாதத்திலிருந்து அமலுக்கு வருகிறது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, ஊதிய உயர்வை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வந்துள்ளது. எனவே அரசு ஊழியர்கள் இந்த அறிவிப்பு வெளியானது முதலே தங்களது புதிய செலவுகளுக்கான திட்டத்தைப் போட ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் படிக்க...