மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கும் உயருகிறது பென்சன். இதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. எனவே அடுத்த மாதம் இந்த ஊதிய உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் விலைவாசி உயருவது மட்டுமல்லாமல், இந்திய ரூபாயின் வாங்கும் திறனும் குறைகிறது. இதை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
2 முறை
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமும், ஜூலை மாதமும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பணவீக்கம் பயங்கரமாக உயர்ந்து வருகிறது. எனவே, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது.ஜூலை மாதம் நெருங்கிவிட்டதாலும், பணவீக்கத்தால் அரசு ஊழியர்கள் திணறி வருவதாலும் மிக விரைவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியதாரர்களுக்கு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதை போல ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கான பென்சன் தொகை உயரும். தற்போது 34% அகவிலை நிவாரணம் வழங்கப்படுகிறது.
சம்பள உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 56,900 ரூபாய். அதில் அகவிலைப்படி 34% என்னுமோது 19,346 ரூபாய் கிடைக்கிறது. ஜூலை மாதம் முதல் அகவிலைப்பைடி 38% ஆக உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியாக 21,622 ரூபாய் கிடைக்கும். அதாவது கூடுதலாக 2,276 ரூபாய் கிடைக்கும்.
குறைந்தபட்ச சம்பளம்
பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000
தற்போதுள்ள அகவிலைப்படி (34%) மாதம் ரூ.6120
புதிய அகவிலைப்படி (38%) மாதம் ரூ.6840
அகவிலைப்படி உயர்வு 6840- 6120 = மாதம் ரூ.720
ஆண்டுக்கு எவ்வளவு லாபம் 720X12 = ரூ 8640
அதிகபட்ச சம்பளம்
பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.56900
தற்போதுள்ள அகவிலைப்படி (34%) மாதம் ரூ.19346
புதிய அகவிலைப்படி (38%) மாதம் ரூ. 21622
அகவிலைப்படி அதிகரிப்பு 21622-19346 = மாதம் ரூ.2276
ஆண்டுக்கு எவ்வளவு லாபம் 2276 X12 = ரூ.27,312
மேலும் படிக்க...