நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI ) வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு மிக முக்கியமான தகவல் உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது 44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. ஜூன் 30க்கு முன்னர் வாடிக்கையாளர்கள் தங்கள் பான்(PAN) மற்றும் ஆதார் (Aadhaar) இணைக்க வேண்டும் என்று வங்கி எச்சரித்து ட்வீட் செய்துள்ளது , அப்படி செய்யாவிட்டால் பணப் பரிவர்தனைகளில் சிக்கல் ஏற்படலாம்
எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதார் மற்றும் பான் இணைப்பது கட்டாயமாகும் என்று ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், பான் செயலற்றதாகி, வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். PAN ஐ ஆதார் உடன் இணைப்பதற்கான கடைசி நாள் ஜூன் 30 ஆகும்.
எஸ்பிஐ சொன்னது என்ன?
'வங்கி சேவையில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பான் மற்றும் ஆதார் இணைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று ட்வீட் செய்வதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு தகவலைத் தெரிவித்தது.
"வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சிரமங்களை மனதில் வைத்து, மத்திய அரசு ஆதார் மற்றும் பான் இணைப்பதற்கான கடைசி தேதியை 20 ஜூன் 2021 வரை நீட்டித்துள்ளது" என்று அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது. பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைப்பதற்கான காலக்கெடுவை 2017 ஜூலை மாதம் முதல் முறையாக அரசாங்கம் நிர்ணயித்திருந்தது. இருப்பினும், அதன் பின்னர் அரசாங்கம் அதன் காலக்கெடுவை பல முறை நீட்டித்துள்ளது.
மேலும் படிக்க.
SBI : ATM , வங்கிகளிலிருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்.
SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி வங்கி கிளையை ஆன்லைனில் மாற்றலாம்!!