Others

Monday, 31 October 2022 11:24 AM , by: Elavarse Sivakumar

வாழும்போது மட்டுமல்ல, வாழ்க்கைக்குப்பிறகும், நம் குடும்பத்தின்ருக்கு உதவுவது என்றால் அது நாம் செய்துகொள்ளும் ஆயுள் காப்பீடுதான். இதனைக் கருத்தில்கொண்டு, ஒரே பிரீமியத்தில் ஓஹோவென லாபம் தரும், அசத்தலான திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஈர்ப்பு

எல்ஐசி இந்த மாதம் 17ஆம் தேதி தன் வர்ஷா (Dhan Varsha)  திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே இத்திட்டம், பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. ஏனெனில், தன் வர்ஷா திட்டத்தில் உத்தரவாத தொகை, போனஸ் உள்ளிட்ட பல்வேறு பலன்கள் உள்ளன.

சந்தை அபாயம் இல்லை

தன் வர்ஷா திட்டம் சந்தையுடன் இணைக்கப்படாத திட்டமாகும். எனவே, பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள் தன் வர்ஷா திட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காது. இத்திட்டம் தனிநபர்களுக்கான சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். எனவே, பயனாளிகளுக்கு பாதுகாப்பு, சேமிப்பு என இரட்டை பலன் கிடைக்கும்.

ஒரே பிரீமியம்

தன் வர்ஷா திட்டத்தில் ஒரே ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும். பாலிசிதாரர் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குகிறது தன் வர்ஷா திட்டம். பாலிசிதாரர் உயிரோடு இருந்தால் மெச்சூரிட்டி தேதியில் மொத்த தொகையும் உத்தரவாதமாக கிடைக்கும்.

2 வகைகள்

தன் வர்ஷா திட்டத்தில் இரண்டு வகை உள்ளன. முதல் வகையில், பாலிசிதாரர் இறந்துவிட்டால் குடும்பத்தினருக்கு 1.25 மடங்கு பிரீமியத் தொகையும், கூடுதல் போனஸ் தொகையும் வழங்கப்படும். அதாவது, பிரீமியம் 10 லட்சம் ரூபாய் என்றால், குடும்பத்துக்கு 12.5 லட்சம் ரூபாய் மற்றும் போனஸ் கிடைக்கும்.

10 மடங்கு

இரண்டாவது வகை திட்டத்தில், பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு 10 மடங்கு பிரீமியம் கிடைக்கும். அதாவது, பிரீமியம் தொகை 10 லட்சம் ரூபாய் எனில், குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இதுபோக போனஸ் தொகையும் வழங்கப்படும்.

தகுதி

தன் வர்ஷா திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 3 ஆண்டு. அதிகபட்ச வயது வரம்பு 60 ஆண்டு. தன் வர்ஷா திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஆன்லைனிலோ, நேரடியாக எல்ஐசி அலுவலகங்களிலோ, எல்ஐசி ஏஜெண்டுகள் வாயிலாகவோ பாலிசியை வாங்கலாம்.

மேலும் படிக்க...

இந்த எருமையின் விலை ரூ.35 கோடி- பாதாம், பிஸ்தாதான் உணவு!

100% மானியத்தில் உளுந்து சாகுபடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)