Others

Monday, 10 April 2023 02:24 PM , by: R. Balakrishnan

Senior citizens

சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை அக்டோபர் மாதம் வரை நீட்டித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி. கொரோனா நெருக்கடி காலகட்டத்தின்போது சீனியர் சிட்டிசன்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக ஐசிஐசிஐ வங்கி ICICI Bank Golden Years FD என்ற சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை பிரத்யேகமாக சீனியர் சிட்டிசன்களுக்காகவே அறிமுகப்படுத்தியது.

சிறப்பு வைப்பு நிதி திட்டம் (Special Fixed deposit scheme)

சிறப்பு வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு குறைந்தபிறகும் கூட சீனியர் சிட்டிசன்களுக்காக இந்த சிறப்பு திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி தொடர்ந்து நீட்டித்து வருகிறது. ஏப்ரல் 7ஆம் தேதியுடன் ஐசிஐசிஐ சீனியர் சிட்டிசன் சிறப்பு FD திட்டம் முடிவுக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில், இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை 2023 அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி. இது சீனியர் சிட்டிசன்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக வெளிவந்துள்ளது.

பொதுவாகவே பெரும்பாலான வங்கிகள் வைப்பு நிதி திட்டங்களில் சாதாரண வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்குகின்றன. ஐசிஐசிஐ சிறப்பு வைப்பு நிதி திட்டத்திலோ, சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்கெனவே வழங்கப்படும் 0.50% அதிக வட்டியுடன் சேர்த்து இன்னும் கூடுதலாக 0.10% வட்டி வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கியின் சிறப்பு வைப்பு நிதி திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக மொத்தம் 0.60% வட்டி வழங்கப்படும். தற்போது சீனியர் சிட்டிசன்களுக்கு ஐசிஐசிஐ வங்கியின் சிறப்பு வைப்பு நிதி திட்டத்தில் 7.5% வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

கால அவகாசம் நீட்டிப்பு

கூடுதல் சிறப்பாக இந்த திட்டத்தை அக்டோபர் மாதம் வரை நீட்டித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி. எனவே, இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெற விரும்பும் சீனியர் சிட்டிசன்களுக்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% ஆக உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!

ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு: கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)