பெண்களுக்குப் பலன் அளிக்கக் கூடிய சிறப்பு பயிற்சிகளை நடத்த சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 25 பயிற்சியாளர்களைக் கொண்ட ஆறு பேட்ச்களை நடத்துவதற்கு நிலையான திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக நபார்டு சுமார் ரூ.14.89 லட்சத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.
கணவனை இழந்தோர் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அவர்களின் நிதி நிலையை மேம்படுத்த நிலையான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திறன் பயிற்சித் திட்டத்தின் முடிவில், பயனாளிகளுக்கு வங்கி இணைப்பு மற்றும் சுயதொழில் மானியத்துடன் கூடிய கடனுதவி தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ வழங்கப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
25 பயிற்சியாளர்களைக் கொண்ட ஆறு பேட்ச்களை நடத்த, நிலையான திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக நபார்டு சுமார் ரூ.14.89 லட்சத்தை அனுமதித்துள்ளது. ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ரூ.2,000 உதவித்தொகை மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கப்படும்.
"Anbin oli Shailoh Mission" என்ற தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நபார்டு மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 150 ஆதரவற்ற பெண்களுக்கு ஏப்ரல் 5 முதல் மே 24 வரை ஆறு இடங்களில் ஆரி எம்பிராய்டரி வேலைகள், கணினிமயமாக்கப்பட்ட கணக்கு எண்ணிக்கை, உணவு பதப்படுத்துதல் மற்றும் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சிகளை வழங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டினம், கோவில்பட்டி, கயத்தாறு, திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் தொகுதிகள் உட்பட்ட பகுதிகளுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பேசுகையில், “போட்டி நிறைந்த உலகில் கணவனை இழந்த பெண்கள் பொருளாதார ரீதியில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், குறிப்பாகப் பொருளாதார பாதிப்பு, வறுமை போன்றவற்றில் இருந்து விடுபட அவர்களுக்கு வழிகாட்டுவதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். "இந்த திட்டத்தில் சேர பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களை அழைத்துள்ளதாகவும், பயிற்சியாளர்களுக்குச் சாத்தியமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறோம்," என்றும் அவர் கூறியிருக்கிறார்.
திங்கள்கிழமை வாராந்திர குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் வேலை, சிறந்த வாழ்வாதாரம் கோரி முதலான ஏராளமான மனுக்களைப் பெற்ற பின்னர் மாவட்ட நிர்வாகம் இத்திட்டத்தை வகுத்ததாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க