மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவோருக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் வீட்டில் இருந்த நிலையிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றினைச் சமர்ப்பிக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குவியும் சலுகைகள்!
மாநில அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், 1 ஜூலை 2022 முதல் 30 செப்டம்பர் 2022 வரை, அவரவர் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைத் தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளைச் சென்னை நகர மண்டல அஞ்சல்துறை செய்திருக்கிறது.
மேலும் படிக்க: Flipkart Offer: அதிரடி ஆஃபர்! 28% ஆஃபரில் LED டிவி!
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், மத்திய அரசின் அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த 31.5.2022 அன்று கையெழுத்தாகியுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது நினைவுக் கூறத்தக்கது.
மேலும் படிக்க: மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்! இன்றே விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!
கொரோனா தொற்று பாதிப்புக் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக, வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து ஓய்வூதியதாரர்களுக்கு மாநில அரசு விலக்கு அளித்திருந்தது என்பதை அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்த ஆண்டு மாநில அரசின் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறும் 7,15,761 பேர் வருகிற ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்களது உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
10, +12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறத் தேதி அறிவிப்பு!
இந்த நிலையில், நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி” வழியாக ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே கைவிரல் ரேகையைப் பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக, தபால்காரரிடம் ரூ.70 ரொக்கமாக செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பெட்ரோல்: இன்றைய விலை நிலவரம் என்ன?
தேவையான விவரங்கள்
- ஆதார் எண்
- செல்போன் எண்
- பிபிஓ எண்
- ஓய்வூதிய கணக்கு விவரங்கள்
- கைவிரல் ரேகை
மேலும் படிக்க: முட்டை விலை அதிரடி உயர்வு! மக்கள் அவதி!!
ஓய்வூதியதாரர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட தபால்காரரிடம் இந்த விவரங்களின் மூலம் பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் எனச் சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இதனைப் பயன்படுத்தி அலையாமால் எளிதைல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பியுங்கள்.
மேலும் படிக்க
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!