Others

Saturday, 18 December 2021 08:16 PM , by: R. Balakrishnan

The minister cleaned school toilet!

தூய்மை பற்றிய தகவலை பரப்ப அரசு பள்ளியின் கழிவறையை மத்திய பிரதேச மந்திரி கழுவி சுத்தப்படுத்தி பரபரப்பு ஏற்படுத்தினார்.

தூய்மை இந்தியா திட்டம் (Clean India Scheme)

நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னெடுத்து செல்லப்படுகிறது. ஆற்றல் துறை மந்திரியாக இருப்பவர் பிரதுமான் சிங் தோமர். இவர், குவாலியரில் உள்ள அரசு பள்ளியின் கழிவறையை நீரால் கழுவி தூய்மைப்படுத்தினார்.

ஊக்கம்

இதுபற்றி அவர் கூறும்போது, மாணவ ஒருவர் என்னிடம், எங்களுடைய பள்ளியின் கழிவறைகள் தூய்மையாக இல்லை. இதனால் மாணவிகள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர் என கூறியுள்ளார். தூய்மை பணிக்காக 30 நாட்கள் உறுதிமொழியை எடுத்துள்ளேன். இதன்படி, ஒவ்வொரு நாளும் சில கல்வி மையத்திற்கு செல்வேன். தூய்மை பணியை மேற்கொள்வேன். அனைத்து மக்களுக்கும் தூய்மை பற்றிய தகவல் சென்றுசேர வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக இந்த பணியை செய்கிறேன். இதனால், தூய்மையாக இருப்பது பற்றி ஒவ்வொருவரும் ஊக்கம் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.

அவர், மக்கள் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டதுடன், பள்ளியை ஒவ்வொரு நாளும் தூய்மையாக வைத்திருக்க நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி!

இ-சேவை மையங்களில் மத்திய அரசின் சேவை இணைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)